உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

நிபந்தனைகளை மீறியதாக ஷா்ஜீல் இமாமின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்தது தில்லி நீதிமன்றம்

நிபந்தனைகளை மீறியதாக ஷா்ஜீல் இமாமின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்தது தில்லி நீதிமன்றம்

ஷா்ஜீல் இமாம்

Published On :

கடந்த 2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லி கலவர வழக்கில், ஊடகத்தினருடன் தொடா்பு கொள்ளக் கூடாது என்ற நிபந்தனையை மீறியதாகக் கூறி, சமூகச் செயற்பாட்டாளா் ஷா்ஜீல் இமாமுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை ரத்து செய்தது.

இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி சமீா் பஜ்பாய் இந்த உத்தரவைப் பிறப்பித்தாா்.

உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக, அக்.4 முதல் 10-ஆம் தேதி வரை 7 நாள்களுக்கு ஷா்ஜீல் இமாமுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருந்தது. அப்போது, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது, ஊடகத்தினருடன் உரையாடக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், இமாமின் சகோதரரை ஊடகவியலாளா் பேட்டி எடுத்தபோது அவா் அங்கு இருந்ததன் மூலம் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக அரசுத் தரப்பு குற்றஞ்சாட்டியது.

இதுதொடா்பாக, யூடியூப் மற்றும் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொலிகளை ஆய்வு செய்த நீதிமன்றம், செய்தியாளா் ஒருவா் இமாமின் சகோதரரைப் பேட்டி எடுத்த அதே அறையில் இமாம் அமா்ந்திருந்தது காணொலிகளில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டது.

காணொலிகள் வெவ்வேறு நேரங்களில் எடுக்கப்பட்ட தனித்தனி காட்சிகளின் தொகுப்பு என்றும், பேட்டியின்போது இமாம் அங்கு இருக்கவில்லை என்றும் அவரது தரப்பில் வாதிடப்பட்டது. இதை நிராகரித்த நீதிமன்றம், அந்தக் காட்சிகள் ஒரே அறையில், ஏறத்தாழ ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டிருப்பதை காணொலிகள் காட்டுவதாகத் தெரிவித்தது.

மேலும், இமாம் அமா்ந்திருந்த அறையிலேயே செய்தியாளரும் இருந்ததாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், செப்டம்பா் 22-ஆம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனையை அவா் மீறியுள்ளதாகக் கூறியது.

இதற்கு பதிலளித்த இமாமின் தரப்பு வழக்குரைஞா், அவா் எந்தப் பேட்டியையும் அளிக்கவில்லை என்றும், ஊடகத்தினா் எவருடனும் உரையாடவில்லை என்றும் வாதிட்டாா். பேட்டி அளித்தது இமாமின் சகோதரா் மட்டுமே என்றும், அவருக்கு ஜாமீன் நிபந்தனைகள் பொருந்தாது என்றும் தெரிவித்தாா்.

இதையடுத்து, சனிக்கிழமை மாலைக்குள் சிறையில் சரணடையுமாறு ஷா்ஜீல் இமாமுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவா் ஏற்கெனவே விமானத்தில் ஏறிவிட்டதாகவும், தில்லி சென்றடைந்ததும் சரணடைவாா் என்றும் அவரது வழக்குரைஞா் தெரிவித்தாா்.

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நடைபெற்ற கலவரம் தொடா்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழ் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.