உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் காலமானார்!
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாய் காலமானது பற்றி...

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது தாய் சாவித்திரி - Photo: x
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாய் சாவித்திரி தேவி (வயது 91) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலை காலமானார்.
உத்தரகண்ட் மாநிலம், பெளரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பூர்வீக இல்லத்தில் வசித்து வந்த சாவித்திரி தேவி, வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்த நிலையில், பௌரி கர்வாலில் உள்ள பூர்வீக இல்லத்தில் இன்று காலை 11.50 மணியளவில் சாவித்திரி தேவி காலமானதாக யோகி ஆதித்யநாத்தின் சகோதரர் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில்,
”உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார், சாவித்ரி தேவி மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும் மனவேதனையையும் அளிக்கிறது.
தாயின் அன்பு, ஆசிகள் மற்றும் கனிவான பாசம் ஆகியவை வாழ்வின் மிக விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும். அவரது மறைவு அந்த குடும்பத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
மறைந்த அந்த ஆன்மாவுக்கு கேதார்நாத்தின் திருவடிகளில் இடமளிக்க வேண்டும் என்றும், இந்த ஆழ்ந்த துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை யோகிக்கும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்க வேண்டும் என்றும் கேதார்நாத்திடம் பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
UP CM Yogi Adityanath's mother Savitri Devi passes away at 91
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

