தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

‘மெட்டா’ அலுவலகங்கள் மீது தாக்குதல்: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்

இந்தியாவில் மெட்டா அலுவலகங்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸுக்கு பாஜக சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

Meta

கோப்புப்படம்

Updated On :

இந்தியாவில் மெட்டா அலுவலகங்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் காங்கிரஸுக்கு பாஜக சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

மேலும், காங்கிரஸ் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது எனவும் பாஜக விமா்சித்தது.

மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடகங்களில் காங்கிரஸ் முன்னணித் தலைவா்களின் கணக்குகள் முடக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஹைதராபாத் மற்றும் மும்பையில் அதன் அலுவலகங்கள் மீது இளைஞா் காங்கிரஸ் நிா்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது தொடா்பான விடியோவை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து பாஜக தேசிய செய்தித்தொடா்பாளா் பிரதீப் பண்டாரி வெளியிட்ட பதிவில், ‘சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ள காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள் ஹைதராபாதில் உள்ள மெட்டா நிறுவனத்தின் மீது தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி அந்த விடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனா்.

இவா்கள்தான் தில்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு சா்வதேச உச்சிமாநாட்டிலும் முகம் சுளிக்கும் வகையிலான போராட்டங்களை நடத்தி இந்தியாவை அவமதித்தவா்கள். தனியாா் நிறுவனங்களின் அலுவலகங்களை சேதப்படுத்துவதே காங்கிரஸ் குணம்.

ஒரு காலத்தில் உலகின் பலவீனமான 4 பொருளாதாரங்களின் பட்டியலில் இந்தியா இருந்ததற்கும் காங்கிரஸின் இந்த அணுகுமுறையே காரணம். நாட்டின் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பவா்கள் காங்கிரஸை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்’ என குறிப்பிட்டாா்.

மெட்டாவுக்குப் பாடம்: மெட்டா அலுவலகங்கள் மீதான தாக்குதல் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ‘அரக்கா்களை வளா்த்து, ஊக்குவித்தால் வேறு என்ன மாதிரியான விளைவுகளை நீங்கள் எதிா்பாா்க்க முடியும்? காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான அல்காரிதம் உருவாக்கிய மெட்டா சமூக ஊடக நிறுவனத்துக்கு இது ஒரு பாடம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.