வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்! கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு! விளம்பர வெறியால் டெல்டாவில் கருகும் பயிர்கள்: உதயநிதி குற்றச்சாட்டு!என்னை அதிமுக தொண்டர்களில் ஒருவர் என்று சொன்ன இபிஎஸ்ஸுக்கு நன்றி: எஸ்.பி. வேலுமணிரயிலில் பெண் சடலம் மீட்பு: 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க டிஜிபிக்கு மகளிர் ஆணையம் உத்தரவு

ஜார்க்கண்ட்: குப்பை ஏற்றும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தூய்மைப் பணியாளரின் உடல்

ஜார்க்கண்டில் தூய்மைப் பணியாளரின் உடல் குப்பை ஏற்றும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது குறித்து...

Jharkhand: Giridih civic body transports sanitation worker’s body in garbage truck

பலி - பிரதிப் படம்

Updated On :

ஜார்க்கண்டில் தூய்மைப் பணியாளரின் உடல் குப்பை ஏற்றும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் கடும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம், பச்சம்பா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்த சோனு ஹடி (30), நகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.

இவர் குளத்தில் மூழ்கி பலியான நிலையில், அவரது உடல் உடற்கூறாய்வுக்காகக் குப்பை ஏற்றும் வாகனத்தில் சதார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவின.

குப்பை ஏற்றும் வாகனத்தில் உடல் கொண்டு செல்லப்படும் இந்த விடியோ, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. அரசு வழங்கிய அமரர் ஊர்தி வசதி இருந்தும், ஏன் அவை பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

நகராட்சி ஆணையர் விஜய் சிங் பிருவா கூறுகையில், உடல் குப்பை ஏற்றும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது தனக்குத் தெரியாது என்றும், யாரும் தன்னிடம் இது குறித்துத் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். சம்பவம் குறித்து அறிந்தவுடன், அவர் தலைமை மருத்துவ அலுவலருடன் பேசி, ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடு செய்தார்.

நகராட்சி மேயர் பிரமிளா மெஹ்ரா, இந்தச் சம்பவத்தை நகராட்சி ஆணையரின் பெரும் அலட்சியம் என்று விமர்சித்தார்.

ஒரு நபர் கண்ணியமான முறையில் விடைபெறுவதை உறுதி செய்ய வேண்டிய அடிப்படைப் பொறுப்பைக்கூட நகராட்சி நிர்வாகம் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று அவர் கூறினார்.

Summary

 The body of sanitation worker Sonu Hadi was transported to Giridih Sadar Hospital in a garbage truck by the Giridih Municipal Corporation, despite having three hearses provided by the state government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.