முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு 'துளியும் புரிதல் இல்லை': ராகுல் காந்தி

ஆன்மீக, மத மரபுகளைப் பற்றி 'துளியும் புரிதல் இல்லை' என ராகுல் விமரிசனம் குறித்து

Rahul Gandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - எக்ஸ்

Updated On :

பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு நமது ஆன்மீக மற்றும் மத மரபுகள் குறித்து துளியும் புரிதல் இல்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

இந்திய ஆன்மீக மற்றும் மத மரபுகளை ஆழமாக ஆராய ஆராய, ஒரு விஷயம் தெளிவாகிறது.

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டும் பண்பாடு இல்லாத, பேராசை கொண்ட, சாதியவாதம் பேசும் மற்றும் ஆண் ஆதிக்க மேலாதிக்கத்தை மட்டுமே முன்னிறுத்தும் அமைப்புகள். இவர்களுக்கு நமது ஆன்மீக மற்றும் மத மரபுகளைப் பற்றி துளியும் புரிதல் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உள்ள எலிபண்டா குகைகளில் உள்ள சிவனும் பார்வதியும் இணைந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பத்தின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், தனது பெற்றோரின் அன்பு குறித்து பேசிய கருத்துக்கு பாஜக தலைவர்கள் விமரிசனம் செய்திருந்தனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், ஆண், பெண் சமத்துவம் மற்றும் அன்பை வலியுறுத்தும் விதமாக ராகுல் தொடர்ந்து இதுபோன்ற பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

The BJP and RSS are uncouth, greedy, casteist male chauvinists with absolutely no understanding of our spiritual and religious traditions.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.