தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க ராகுலுக்கு தார்மீக உரிமை உள்ளதா? நிதின் நவீன் கேள்வி?

வெளிநாட்டுக் கருவிகளால் ராகுல் காந்தி இயக்கப்படுகிறார்.. நிதின் நவீன் குற்றச்சாட்டு

BJP National President Nitin Nabin

பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன்... - ENS

Updated On :

பிரதமர் மோடியுடன் விவாதத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வெளிநாட்டுக் கருவிகளால் இயக்கப்படுகிறார் என பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோரக்பூரில் நடைபெற்ற ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் பேரணியில் உரையாற்றிய பாஜக தலைவர் பேசியதாவது,

அமேதியில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் பாஜகவால் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடியிடம் விளக்கம் கேட்க உங்களுக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது? உங்களுக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்? அமேதியில் வளர்ச்சிப் பணிகளுக்கான அடிக்கலை யாராவது நாட்டியிருந்தால் அது பாஜக அரசும், பாஜக தலைவர்களும்தான்.

எஸ்ஐஆர் காரணத்தால்தான் தாங்கள் தேர்தலில் தோல்வியடைந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி களத்தில், கட்சித் தொண்டர்களுடனும் இணைந்து பணியாற்றியிருந்தால், நாட்டில் இத்தகைய மோசமான தேர்தல் சூழலை அவர்கள் எதிர்கொண்டிருக்க வேண்டியிருந்திருக்காது. சுதந்திரம் என்ற போர்வையில் நாட்டில் தங்களால் இயன்றவரை அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றவர்கள் இவர்கள்தான்.

வறுமையை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்தவர்கள், அதைச் செய்யத் தவறியது மட்டுமல்லாமல், ஏழைகளை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளிவிட்டனர். ஆனால், பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் தலைமையின் கீழ், நாடும் உத்தரப் பிரதேச மாநிலமும் முன்னேற்றப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

தில்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி நடத்திய பிரம்மாண்ட பேரணியில், அவர்கள் எதிர்பார்த்த மக்கள் கூட்டத்தில் 10 சதவீதத்தைக் கூட அவர்களால் திரட்ட முடியவில்லை. இதற்கு மாறாக பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சியான என்டிஏவும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு நகரத்திலும் மிகப்பெரிய பேரணிகளை நடத்தி வருகின்றன. இந்தப் பேரணிகள் ஆளும் கூட்டணியின் வலிமையையும், மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.