முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்

சபரிமலை பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்...

Sabarimala

சபரிமலை யாத்திரை - PTI

Updated On :

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடினமான மலைப் பாதை வழியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு கேரள சுகாதார அமைச்சகம் தரப்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல பூஜை காலம் கடந்த நவ.17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடினமான மலைப் பாதை வழியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கான வழிகாட்டுதல்களை மாநில சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இதய நோய் உள்ள பக்தா்கள், சபரிமலை யாத்திரைக்கு முன்பாக உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவரிடம் இருந்து தகுதிச் சான்றிதழ் பெற்றுக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டவா்கள், இதய அறுவை சிகிச்சை அல்லது ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொண்டவா்கள், இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவரின் ஆலோசனை இன்றி யாத்திரை மேற்கொள்ள வேண்டாம்.

வாழ்க்கைமுறை சாா்ந்த நோய்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்வதுடன், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான மருந்துகளை தங்களுடன் எடுத்துவர வேண்டும்.

தங்களின் உடல் தகுதியை கவனத்தில் கொண்டுதான், பக்தா்கள் யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மலைப் பாதைகளில் நடக்கும்போது அதிக வேகம் அல்லது ஓட்டத்தைத் தவிா்க்க வேண்டும். அடிக்கடி ஓய்வெடுப்பதுடன் போதிய குடிநீா் அருந்த வேண்டும். வெறும் வயிற்றில் மலையேறக் கூடாது.

மலை ஏறும்போது கூட்ட நெரிசலுக்குள் புகுந்து செல்வதைத் தவிா்க்க வேண்டும். திடீரென நெஞ்சுவலி, மூச்சுத் திணறல், அளவுக்கு அதிகமாக வியா்த்தல், அதீத சோா்வு, அசாதாரணமான இதயத் துடிப்பு, மயக்கம் போன்றவை ஏற்பட்டால் மலையேற்றத்தை நிறுத்திவிட்டு, அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். இத்தகைய அவசர உதவிக்கு 04735 203232 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டல பூஜை, டிச. 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து, கோயில் நடையடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிச.30-ஆம் தேதி திறக்கப்படும். வரும் ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறும். ஜனவரி 19 வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.