கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு

மண்டல - மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படுவது பற்றி....

Sabarimala Temple To Open On November 16 For Mandala-Makaravilakku Season

சபரிமலை ஐயப்பன் கோயில்.

Updated On :

மண்டல - மகரவிளக்கு பூஜைகளுக்காக, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள்கிழமை(நவ. 16) மாலை 5 மணிக்குத் திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், தற்போதைய மேல்சாந்தி இ.டி. பிரசாத் நம்பூதிரி கோயில் நடையைத் திறந்து வைப்பார். தொடர்ந்து, நவம்பர் 17-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக நடை மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பாக, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேல்சாந்திகளான சுப்பிரமணியன் சங்கரன் நம்பூதிரி மற்றும் ஏ. தாமோதரன் நம்பூதிரி ஆகியோர் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜைக்குப் பிறகு கோயில் நடை அடைக்கப்பட்டு, மகரவிளக்குத் திருவிழாவிற்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் திறக்கப்படும். மகரவிளக்குத் திருவிழா ஜனவரி 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, யாத்திரையின் போது பக்தர்கள் உயிரிழக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்யும் பக்தர்களுக்கு இந்தக் காப்பீடு பொருந்தும். பக்தர் சன்னிதானத்திற்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே தொடங்கும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் மூன்று நாள்களுக்குச் செல்லுபடியாகும்.

முதல் நாளில் விபத்து மரணங்களுக்கும், அடுத்த இரண்டு நாட்களில் விபத்து மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட இயற்கை மரணங்களுக்கும் இதன் மூலம் காப்பீடு வழங்கப்படும். இந்தக் காப்பீட்டிற்காக பக்தர்கள் எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. இதற்கான வருடாந்திர பிரீமியம் தொகையான ரூ. 1.5 கோடியை தேவசம் போர்டே ஏற்கும்.

Summary

The Sabarimala temple in Keralam’s Pathanamthitta district will open at 5 pm on 16 November, marking the beginning of the 2026-27 Mandala-Makaravilakku pilgrimage season. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.