கெளரவ விரிவுரையாளர்களுக்கு ரூ. 5,000 ஊதிய உயர்வு! செப். முதல் முன் தேதியிட்டு வழங்க அன்புமணி கோரிக்கை!ஆந்திரத்தை நோக்கி நகரும் 'அக்வான்' புயல்: வானிலை ஆய்வு மையம் தகவல்திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும்: அண்ணாமலை சோனியா காந்தியின் சுயசரிதை: ஹாரி பாட்டர் புத்தகத்துக்கு இணையான வரவேற்பு! சென்னைக்கு நவ. 18, 19 ஆம் தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!மேகேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் மேலிடத்திற்கு முதல்வர் விஜய் அழுத்தம் கொடுக்க இபிஎஸ் வலியுறுத்தல்!

திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்று வருவது குறித்து...

Grand celebrations for Soorasamharam at Tiruchendur Temple

சூரசம்ஹார நிகழ்வில்...

Updated On :

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

சூரபத்மனை, முருக பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாக உள்ளது. இதனால் இதனைப் பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் கோயிலில் குவிந்துள்ளனர்.

சூரசம்ஹாரம் தொடங்கியதுமே முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் தனது வெள்ளி வேலால் வதம் செய்கிறார்.

இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனையும், மூன்றாவதாக சுயரூபத்துடனும் போரிட்ட சூரபத்மனை சுவாமி வதம் செய்வார். பின்னர் மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொள்கிறார்.

சூரசம்ஹாரத்தையொட்டி விரதம் உள்ள பக்தர்கள், சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் மூழ்கி நீராடி விரதத்தை நிறைவு செய்வார்கள்.

சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோச மண்டபத்தில் எழுந்தருளவுள்ளார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாரதனை நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்வையொட்டி, தூத்துக்குடி எஸ்பி சிவபிரசாத் தலைமையில் 4000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்கரையில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒலிப்பெருக்கி மூலம் மக்களை தொடர்ந்து எச்சரித்து அறிவிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.

பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, தாய்மார்களுக்கான பாலூட்டும் அறைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Summary

Grand celebrations for Soorasamharam at Tiruchendur Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.