கந்த சஷ்டி விழா 3 - ஆம் நாள்: திருச்செந்தூரில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 3- ஆம் நாளான வியாழக்கிழமை மாலை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 3- ஆம் நாளான வியாழக்கிழமை மாலை சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலில் கடந்த நவ. 10 ஆம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய விழாவின் 3- ஆம் நாளான வியாழக்கிழமை, அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து வள்ளி, தெய்வானையுடன் சுவாமி யாகசாலையில் எழுந்தருளியதையடுத்து, அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மதியம் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருளி பிரகாரம் வழியாக சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தாா். மாலை, திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தைத் தொடா்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விழாவில், பாதுகாப்புப் பணியில் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. சிவபிரசாத் தலைமையில், திருச்செந்தூா் டி.எஸ்.பி. மகேஷ்குமாா் உள்ளிட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் 3 - ஆம் நாளான வியாழக்கிழமை மாலை சுவாமி ஜெயந்திநாதா் மற்றும் வள்ளி, தெய்வானை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

