சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் மேற்கொண்டது பற்றி...

கேரள முதல்வர் வி.டி. சதீசன்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு மத்தியில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
மழையையும் பொருட்படுத்தாமல், ஐயப்ப பக்தர்கள் அணியும் பாரம்பரிய கருப்பு நிற ஆடையை அணிந்து, முதல்வர் சதீசன் புனித மலை ஏறினார். அவருடன் மாநில காவல் துறை தலைமை இயக்குநர் ரவடா ஏ. சந்திரசேகர் மற்றும் பிற காவல் துறை அதிகாரிகளும் உடன் சென்றனர்.
கோயிலுக்கு 'இருமுடி' ஏதும் இன்றி அவர் சென்றதை தொலைக்காட்சி காட்சிகளில் காண முடிந்தது. சுவாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கங்களுக்கு இடையே, தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களைப் பார்த்து முதல்வர் புன்னகைத்து கையசைத்தார்.
இதற்கிடையில், மலையாள மாதமான துலாம் மாத பூஜைகளுக்காகக் கோயில் நடை இன்று திறக்கப்பட்டதை அடுத்து, ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
முன்னதாக, சபரிமலை அடிவாரத்திலுள்ள பம்பைக்குச் சென்ற முதல்வர் சதீசன், நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
Summary
Chief Minister V D Satheesan on Saturday visited Sabarimala and offered prayers at the Lord Ayyappa temple, which opened for the monthly poojas amid a heavy rush of devotees.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


