நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் ஓசையில்லாமல் ஆக்கிய தென்கொரியா! ஆச்சரிய தகவல்எலும்பு முறிவு! விமானம் மூலம் கொண்டு செல்லப்படும் குட்டி யானை! அனந்த் அம்பானி முன்னெடுப்புதங்கம் விலை குறைய மூன்று முக்கிய காரணங்கள்!வேகம் முக்கியம்! நாரா லோகேஷ் கிண்டலுக்கு பதில் கொடுத்த அமைச்சர் கீர்த்தனா!கணவரின் தோழியைக் கொல்ல ரூ.13 லட்சம் கூலி! துப்புத் துலக்க உதவிய 300 சிசிடிவிகள், ஜிபிஎஸ் டிராக்கிங்!ஜோதிடர் பேச்சால் மீனவர்களின் வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கும் தவெக அரசு: மு.க. ஸ்டாலின்நவ. 23-இல் திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்

சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்குக் கேரள முதல்வரின் வேண்டுகோள்!

சபரிமலை புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு கேரள முதல்வர் சதீசன் கூறும் வேண்டுகோள் பற்றி..

Sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயில் - file photo

Updated On :

சபரிமலை புனித யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் பக்தர்கள் பம்பை நதியிலும், கோயில் வளாகத்தின் தூய்மையை பாதுகாக்குமாறு பக்தர்களுக்கு கேரள முதல்வர் வி.டி. சதீசன் வேண்டுகோள் விடுத்தார்.

கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில், கார்த்திகை மாத சீசன் தொடங்கியுள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலைக்குப் படையெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு அந்த மாநில முதல்வர் சதீசன் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

சபரிமலை புனித யாத்திரை சீசன் தொடங்கி, பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், புனிதமான பம்பை நதியிலோ, மலைக் கோயில் வளாகத்திலோ குப்பைகளை வீச வேண்டாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவதைக் கருத்தில் கொண்டு, ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சபரிமலையைப் புனிதமாக வைத்திருங்கள். பம்பை நதியைத் தூய்மையாக வைத்திருங்கள்.

சபரிமலை யாத்திரையில் பம்பை நதி முக்கிய அங்கமாக்கத் திகழ்கிறது, லட்சக்கணக்கான பக்தர்களுக்கு சபரிமலை புனிதத் தலமாகும். அங்கு வரும் அனைவரும் அதன் புனிதத்தன்மையைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும்.

குறிப்பாக, பக்தர்கள் ஆடை, நெகிழி அல்லது பிற கழிவுகளை ஆற்றில் வீச வேண்டாம். வருங்கால சந்ததியினருக்காக ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நீடிக்கும் வருடாந்திர மண்டல யாத்திரை சீசன், கடந்த நவம்பர் 17-ஆம் தேதி தொடங்கியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.