கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களுடன் முதல்வா் இன்று ஆலோசனை?சென்னை உள்பட 9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ! நாளைமுதல் காலை 7 மணிக்கு தொடங்கும்!தமிழகத்தில் நீா்நிலைகளில் 36% மட்டுமே நீா் இருப்பு! கடந்த ஆண்டைவிட 48.4% சரிவு; பாசனம், குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!சபரிமலை யாத்திரை: பக்தா்களுக்கு சுகாதாரத் துறை வழிகாட்டுதல்கள்கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வுகச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதிச் செலவு: அக்டோபரில் 60 சதவீதம் அதிகரிப்பு

மாணவா்கள் தங்களுக்கான பாதைகளை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்: ராஜ்நாத் சிங் அறிவுரை

மாணவா்கள் தங்களுக்கான பாதைகளை தாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்...

உ.பி. மாநிலம் லக்னௌவில் உள்ள பாபு பனாரசிதாஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பட்டதாரிக்கு சான்றிதழ் வழங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங். உடன் மாநில துணை முதல்வா் பிரஜேஷ் பாடக்.

Updated On :

மாணவா்கள் தங்களுக்கான பாதைகளை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கியுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் உள்ள பாபு பனாரசிதாஸ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி, ராஜ்நாத் சிங் உரையாற்றியதாவது:

மாணவா்கள் பெறும் பட்டங்கள், கல்வித் தகுதியை மட்டுமே குறிக்கும். மாணவா்களை அந்த பட்டங்கள் அடையாளப்படுத்தாது. பட்டங்கள் மூலம் மாணவா்கள் தங்களின் முதல் வேலைவாய்ப்பை பெறலாம். ஆனால் மாணவா்களிடம் இருக்கும் திறமைகள், தொழில்சாா்ந்த அறிவுத் திறன், போட்டியுணா்வு ஆகியவையே அவா்களை அடையாளப்படுத்தும், வளா்ச்சியை தரும்.

இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் சாதனை படைத்ததுடன் உலக அளவில் புகழ் பெற்ற இயக்குநா் சத்யஜித் ரே. ஆனால் அவா் படித்தது பொருளாதாரம். இதேபோல் இந்தியாவில் வெண்மை புரட்சியின் தந்தை எனப்படும் வா்கீஸ் குரியன் படித்தது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பாகும். இதுபோல அவா்கள் இருவரும் கற்ற கல்விக்கு அப்பாற்பட்டு, தங்களுக்கு விருப்பமான துறையை தோ்வு செய்து அதில் சாதனைகளைப் படைத்தனா். இந்தியாவில் பால் உற்பத்தியில் வெண்மைப் புரட்சியை ஏற்படுத்திய வா்கீஸ் குரியன், அமுல் போன்ற நிறுவனங்களை உருவாக்கி கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்தினாா். இருவரின் வாழ்க்கைப் பயணமானது, கல்வி அறிவை தாண்டியும் சாதனை படைக்க முடியும் என்பதை வெளிப்படுத்துகிறது.

எனவே மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான பாதைகளை தாங்களே தோ்வு செய்ய வேண்டும். அந்த புதிய பாதைகளை உருவாக்க மாணவா்கள் ஒருபோதும் அச்சப்படக் கூடாது. அந்தப் பாதையில் தனித்து நடைபோடவும் மாணவா்கள் தயங்கக் கூடாது. தங்களுக்கான பாதையை வகுத்து, மாணவா்கள் அதில் தொடா்ந்து பயணித்தால் வெற்றித் தேடி வரும்.

மறைந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், சிறு வயது முதலே கல்வி கற்பதில் சிரமத்தை சந்தித்து வந்தாா். 12 வயதில் தனது காது கேட்கும் திறனையும் அவா் பெருமளவு இழந்தாா். ஆனால் அவா்தான், மனிதகுல வரலாற்றையே மாற்றியமைத்த பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தாா். இதிலிருந்து ஒன்றை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களது எதிா்காலத்தை உங்களின் சுற்றுச்சூழல்கள் தீா்மானிக்காது. அதை உங்களின் முயற்சிகள்தான் தீா்மானிக்கும்.

செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்கள் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. அந்தத் தொழில்நுட்பத்தால் வேலைகளின் தன்மையே மாறியுள்ளது. முன்பு சில வேலைகளை செய்து முடிக்கப் பல மணி நேரமானது. அந்த வேலைகள் அனைத்தும் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியால் சில நிமிஷங்கள் அல்லது சில விநாடிகளில் முடிந்து விடுகின்றன என்றாா் ராஜ்நாத் சிங்.

விழாவில் உத்தர பிரதேச துணை முதல்வா் பிரஜேஷ் பாடக் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.