ஆசியாவின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா! கிரண் ரிஜிஜு
லோவி இன்ஸ்டிடியூட் அறிக்கையில் முக்கிய தகவல்..

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு - கோப்புப்படம்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் நாடு மாற்றமடைந்து முன்னேறி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
லோவி இன்ஸ்டிடியூட்டின் ஆசிய சக்தி குறியீடு 2006 அறிக்கையில், ஆசியாவின் இந்தியா மூன்றாவது சக்திவாய்ந்த நாடாகவும், முக்கிய மையமாகவும் வலிமை பெற்றுள்ளது.
லோவி இன்ஸ்டிடியூட் மட்டுமல்ல, பல சர்வதேச தரமதிப்பீட்டு அமைப்புகளும் பொருளாதாரம், ராணுவம் மற்றும் நிதித் துறைகளில் இந்தியாவிற்கு மிக உயர்ந்த இடங்களை வழங்கியுள்ளன.
12 ஆண்டுகளுக்கு முன்பு நாடு தரவரிசையில் பின்னோக்கி இருந்ததாகவும், தற்போது முன்னேறி வந்துள்ளோம். இன்று நாம் முதல் மூன்று நான்கு இடங்களுக்குள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறோம்.
இந்தியா தற்போது மாறிவிட்டது, நமது தலைமைத்துவம் வலிமையானது. எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துகளைக் கூறலாம், ஏனென்றால் அவர்களால் மோடி அரசைப் பாராட்ட முடியாது என்பது இயல்பானதே.
எதிர்க்கட்சிகள் நம்மைப் பாராட்டவில்லை என்பதற்காக அவர்கள் சொல்வது சரி என்று அர்த்தமல்ல. அவர்களுக்குப் பேசுவதற்கு உரிமை உண்டு, ஆனால் நாடு மாறிவிட்டது.
இந்தியா வெகுதூரம் முன்னேறிவிட்டது. இந்தாண்டு இந்தியா தனது முக்கிய சக்தி அந்தஸ்தை உறுதிப்படுத்திக் கொண்டதோடு, ஆசியாவில் அதிக செல்வாக்குமிக்க நாடாகவும் வளர்ந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


