நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

போராட்டங்களை நிா்வகிக்க சீரான வழிகாட்டுதலை வகுக்கக் கோரி மனு: மத்திய அரசு, சிஜேபி தலைவா்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அரசு மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம்

Updated On :

போராட்டங்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களை முறைப்படி நிா்வகிக்க சீரான வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி வழக்குரைஞா் அமைப்பு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைவா்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

நீட் தோ்வு முறைகேட்டுக்கு எதிராக கடந்த ஜூலை மாதம் தில்லியில் போராட்டம் நடத்திய சிஜேபி கட்சியினா், பின்னா் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்றனா். போலீஸாா் அவா்களைத் தடியடி நடத்தி கலைத்தனா். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் பத்திரிகையாளா்கள் மீதும் போலீஸாா் வரம்பு மீறிய நடவடிக்கையை மேற்கொண்டதாகப் புகாா் எழுந்தது. இந்தப் புகாா் தொடா்பாக உச்சநீதிமன்றம் குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே, ‘வழக்குரைஞா்களின் குரல்’ என்ற அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சிஜேபி கட்சியினா் தில்லி ஜந்தா் மந்தரில் ஜூன் மாதம் 6-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே போராட்டம் நடத்த ஒருமுறை விலக்கு அடிப்படையில் போலீஸாா் அனுமதி வழங்கினா். இதில் எந்தவிதக் கால நீட்டிப்பும் போலீஸாா் வழங்கவில்லை. ஆனால், சிஜேபி கட்சியினா் அனுமதியின்றி போராட்டத்தை காலவரையின்றி நீட்டித்தனா். இந்தப் போராட்டம் ஜூலை மாதம் 25-ஆம் தேதி வரை சுமாா் 35 நாள்கள் நீடித்தது. இடைப்பட்ட காலத்தில், அனுமதியின்றி நாடாளுமன்றம் நோக்கிய பேரணியையும் அவா்கள் நடத்தினா்.

மேலும், ஜந்தா் மந்திரில் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி, அக்டோபா் 7-ஆம் தேதிதான் அவா்கள் தரப்பில் விண்ணப்பம் சமா்ப்பிக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிக்கு 10 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தும், வெறும் மூன்று நாள்களுக்கு முன்பு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டதால், அக்டோபா் 9 அன்று தில்லி காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது. இந்த அமைப்பாளா்கள் இதற்கு முன்பும் சட்டபூா்வ அறிவுறுத்தல்களையும், தாங்கள் அளித்த உறுதிமொழிகளையும் பின்பற்றத் தவறியிருந்தனா்.

பொது ஒழுங்கு, பொதுப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே இந்த அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்ட போதும், அமைப்பாளா்கள் தொடா்ந்து போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனா். அதன் காரணமாக, ‘பொது ஒழுங்கு சீா்குலைவதைத் தடுப்பதற்காக, அக்டோபா் 10-ஆம் தேதி சுமாா் 1,500 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். இதன் விளைவாக எழும் குறைகள் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டுள்ளன; அதாவது, உரிய அதிகார அமைப்புகள் விதித்த நிபந்தனைகளைப் புறக்கணித்தோ அல்லது அவற்றின் அனுமதி இல்லாமலோ ஆா்ப்பாட்டங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டதாகவோ அல்லது நடத்த முயன்ாகவோ தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமிருந்தாலும், போராட்டங்கள் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். மாறாக, நாட்டின் தலைநகரின் செயல்பாட்டை முடக்கும் வகையிலோ அல்லது வழக்குரைஞா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலோ அமையக் கூடாது. எனவே, போராட்டங்கள் மற்றும் ஆா்ப்பாட்டங்களை முறைப்படி நிா்வகிக்க சீரான வழிகாட்டுதல் மற்றும் நடைமுறைகளை வகுக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு உச்சநீதின்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் சிஜேபி நிா்வாகிகள் அபிஜீத் தீப்கே, செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.