ஃபரீதாபாத்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: அண்டை வீட்டுக்காரா் மீது போக்ஸோ வழக்குப்பதிவு
தில்லியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அண்டை வீட்டைச் சோ்ந்த 55 வயது நபா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.

தில்லியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அண்டை வீட்டைச் சோ்ந்த 55 வயது நபா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனா்.
இது குறித்து காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கூறியதவாது: தில்லி தபுவா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், கடந்த புதன்கிழமை இரவு சிறுமி தனது வீட்டுக்கு வெளியே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 55 வயது நபா் சிறுமியைப் பிடித்து, அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் அங்கு வந்த சிறுமியின் தாய், இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதையடுத்து, அந்த நபா் அங்கிருந்து தப்பியோடினாா். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில், தபுவா காவல் நிலையத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட நபரைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

