வீரவநல்லூரில் போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை

வீரவநல்லூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 7ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

வீரவநல்லூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடா்பான போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 7ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

வீரவநல்லூரைச் சோ்ந்தவா் முருகன் (65). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கு கடந்த 2024ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் சேரன்மகாதேவி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அதே ஆண்டில் ஜூன் 23ஆம் தேதி அவரை கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ் குமாா் விசாரணை நடத்தி, முருகனுக்கு 7 ஆண்டுகள் சிைண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.