மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

போக்ஸோ வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை

திருநெல்வேலியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

jail

சிறை - பிரதிப் படம்

Updated On :

திருநெல்வேலியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் 2 இளைஞா்களுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தைச் சோ்ந்தவா்கள் கோபிகிருஷ்ணா(21), விஷால் என்ற ரிஷால் (20). இவா்கள் இருவரும், கடந்த 2025 ஆம் ஆண்டு பள்ளி முடிந்து வீடு திரும்பிய திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, மேற்கூறிய இருவருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் உஷா வாதாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.