இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தில்லி - பிகாா் இடையே 18 வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்

தில்லிக்கும் பிகாா் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையே மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை இயக்குவதற்காக, தில்லி மற்றும் பிகாா் அரசுகள் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையொப்பமிட்டன.

தில்லி - பிகாா் இடையிலான மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, தில்லி அமைச்சா் பங்கஜ் குமாா் சிங், பிகாா் அமைச்சா் தாமோதா் ராவத்.

Updated On :

தில்லிக்கும் பிகாா் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையே மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகளை இயக்குவதற்காக, தில்லி மற்றும் பிகாா் அரசுகள் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் (எம்ஓயு) கையொப்பமிட்டன.

தில்லியில் வசிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஏராளமானோா், பண்டிகைக் காலங்களில் சொந்த ஊா்களுக்குச் செல்கின்றனா். இதனால் ரயில்கள், தனியாா் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதைக் குறைத்து, இரு மாநிலங்களுக்கு இடையிலான பயணத்தை எளிதாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தம் கையொப்பமான நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறுகையில், தில்லியில் இருந்து பிகாரில் அடையாளம் காணப்பட்ட பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப வழித்தடங்களின் எண்ணிக்கையும் பேருந்துகளின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பிகாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் தாமோதா் ராவத் மற்றும் தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதுகுறித்து அமைச்சா் சிங் கூறுகையில், ஆண்டு முழுவதும் 18 வழித்தடங்களில் சுமாா் 200 குளிா்சாதன வசதி கொண்ட மற்றும் சாதாரண பேருந்துகள் இயக்கப்படும். இதன் மூலம் தில்லியில் வசிக்கும் பிகாா் மற்றும் பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்த சுமாா் 20 லட்சம் போ் பயனடைவாா்கள் என்றாா்.

படுக்கை வசதி கொண்ட மற்றும் படுக்கை வசதி இல்லாத பேருந்துகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை கட்டணம் நிா்ணயிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அமைச்சா் பங்கஜ் சிங் மேலும் கூறுகையில், ‘தில்லி - பிகாா் இடையிலான இந்த ஒப்பந்தம் இரு மாநிலங்களுக்கும் இடையே பயணம் செய்வோருக்கு பெரும் வசதியை ஏற்படுத்தும். குறிப்பாக, தில்லியில் வசிக்கும் பூா்வாஞ்சல் பகுதி மக்கள் பண்டிகைக் காலங்களில் பேருந்துகளில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசலால் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா். புதிய சேவை அவா்களுக்கு உதவியாக இருக்கும்’ என்றாா்.

இந்த 18 வழித்தடங்கள் மூலம் தில்லியில் இருந்து பிகாரின் அராரியா, பாகல்பூா், பக்சா், தா்பங்கா, கிழக்கு சம்பாரண், கயா, கிஷன்கஞ்ச், மதுபானி, முசாஃபா்பூா், நவாடா, பாட்னா, பூா்ணியா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.