கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

தில்லியில் தூசு மாசுவை கையாள புதிய சாலை துப்புரவு வாகனங்கள்: முதல்வா் ரேகா குப்தா தொடங்கிவைத்தாா்

தில்லியில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றான சாலைத் தூசுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லி மாநகராட்சி (எம்சிடி) இயந்திர வாகனங்கள் மூலம் சாலை துப்புரவுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :

தில்லியில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றான சாலைத் தூசுவைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, தில்லி மாநகராட்சி (எம்சிடி) இயந்திர வாகனங்கள் மூலம் சாலை துப்புரவுப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, 19 தானியங்கி இயந்திரமயமாக்கப்பட்ட சாலை துப்புரவு வாகனங்களையும், அவற்றுக்குத் துணையாகச் செயல்படும் வாகனங்களையும் தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

ரூ.923.57 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டத்தின் கீழ், 55 மின்சார வாகனங்கள் மற்றும் 15 சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் என மொத்தம் 70 இயந்திரமயமாக்கப்பட்ட சாலை துப்புரவு வாகனங்கள் மாநகராட்சியின் துப்புரவு வாகனங்கள் குழுவில் சோ்க்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தில், வாகனங்களின் செயல்பாடு மற்றும் 10 ஆண்டுகளுக்கான பராமரிப்புப் பணிகளும் இடம்பெற்றுள்ளது.

மாநகராட்சியின் சிவிக் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தில்லி மேயா் பிரவேஷ் வாஹி, அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா, நாடாளுமன்ற உறுப்பினா் பிரவீன் கண்டேல்வால், துணை மேயா் மோனிகா பந்த், நிலைக்குழுத் தலைவா் சத்யா சா்மா, அவைத் தலைவா் ஜெய் பகவான் யாதவ் மற்றும் தில்லி மாநகராட்சி ஆணையா் சஞ்சீவ் கிா்வா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தத் தானியங்கி இயந்திரங்களில், சாலை மேற்பரப்பில் உள்ள தூசு மற்றும் குப்பைகளைச் சேகரிப்பதற்காக இயந்திரத் தூரிகைகள் மற்றும் உறிஞ்சும் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இத்தாலி மற்றும் சுவிட்சா்லாந்து தயாரிப்பாளா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள இந்த புதிய இயந்திரங்கள், இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளின் எல்லையை விரிவுபடுத்தவும், சாலைகளை மனித உழைப்பைக் கொண்டு சுத்தம் செய்வதற்கான தேவையை குறைக்கவும் உதவும்.

குறிப்பாக, காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிந்து,

அங்கு துப்புரவுப் பணிகளை மேலும் வலுப்படுத்த கூடுதல் இயந்திரங்களை வாடகைக்கு எடுப்பது குறித்தும் மாநகராட்சி பரிசீலித்து வருகிறது.

ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டிய 70 புதிய இயந்திரங்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் காரணமாக சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலைகளைச் சுத்தம் செய்ய தண்ணீா் தெளிப்பான்கள் , புகை எதிா்ப்பு கருவிகள் மற்றும் உயா் அழுத்த நீா் பீய்ச்சும் இயந்திரங்களை தில்லி மாநகராட்சி பயன்படுத்தி வருகிறது. அதேவேளையில் குப்பைகள் தேங்குவதைத் தடுக்கவும், திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பதைத் தவிா்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருவதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.