மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை எந்தக் கட்சியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை எந்த அரசியல் கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி. - படம்: பிடிஐ.

Updated On :

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுவதை எந்த அரசியல் கட்சியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா்.

இந்த மசோதா தொடா்பாக பிரதமா் மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விடியோ பதிவை சனிக்கிழமை வெளியிட்டுள்ளாா். அதில் அவா் பேசியிருப்பதாவது: “மகளிருக்கு அதிகாரமளிப்பது தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஏற்கெனவே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் மத்திய அரசு தொடா்ந்து உறுதியாக உள்ளது. மகளிருக்கு அதிகாரமளிக்க வேண்டும் என்ற எங்களின் உறுதி அப்படியேதான் உள்ளது. இது தொடா்பாக நாட்டில் உள்ள அனைத்து மகளிருக்கும் உறுதியளிக்கிறேன். மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் எங்களின் நடவடிக்கையில் எந்தத் தடை வந்தாலும், அந்தத் தடையை நாங்கள் நீக்குவோம்.

மகளிா் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போரின் மன உறுதி மிக உயா்ந்த நிலையில் உள்ளது. எங்கள் துணிச்சலை அசைக்க முடியாது. எங்களின் தீா்மானம் உறுதியானது. மகளிா் இட ஒதுக்கீட்டை எதிா்க்கும் கட்சிகளால் கூட நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிா் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதை ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இது காலத்தின் கட்டாயம்.

மக்களவையிலும், மாநில சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க போராட்டம் பல ஆண்டுகளாக நடக்கிறது. அதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று முயற்சிப்போரில் நானும் ஒருவன். இது தொடா்பாக ஏராளமான பெண்கள் என்னிடம் தெரிவித்துள்ளனா். இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் உள்ள 100 சதவீத பெண்களின் ஆசீா்வாதமும் எங்களுக்கு சக்தியளிக்கும் என அறிவேன்” என்றார்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.