முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பிகாரில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்: 3 பேர் பலி, ஒருவர் காயம்

பிகாரில் இரு குழுக்களுக்கு இடையே மோதலில் 3 பேர் பலியானது பற்றி...

3 killed, one injured in clash between two groups in Bihar's Saran; 6 detained

கோப்புப்படம்.

Updated On :

பிகாரில் இரு குழுக்களுக்கு இடையே மோதலில் 3 பேர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், கத்தியால் குத்தப்பட்டு 3 பேர் பலியாகினர். மற்றொருவர் காயமடைந்தார் என்று போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். சனிக்கிழமை இரவு பர்சா கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர்கள் கூறினர்.

பலியானவர்கள் முகேஷ் யாதவ், ரவிஷ் யாதவ் மற்றும் அன்கு குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர் விவேக் குமார் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர். சரண் மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் ரோஷன் குமார் கூறுகையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மற்ற இருவரும் சிகிச்சை பலனின்றி பலியாகினர். காயமடைந்தவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது. உடல்கள் கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மோதலுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

விசாரணைக்காக ஆறு பேர் பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவது தொடர்பான தகராறிலேயே இரு குழுக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Three people were stabbed to death, and another was injured following a clash between two groups in Bihar's Saran district, police said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.