சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! இடைத்தேர்தல் வெற்றி விஜய் அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்: வைகோதமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை: 3 பேர் பலி

மணிப்பூரில் ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல்களில் 3 பேர் பலியானது பற்றி....

3 killed in fresh violence in strife-hit Manipur

கோப்புப் படம்

Published On :

மணிப்பூரில் ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

மணிப்பூர் மாநிலம், காம்ஜோங் மற்றும் உக்ருல் மாவட்டங்களில் ஆயுதமேந்திய குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட புதிய மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். நாகா மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் காம்ஜோங் மாவட்டத்தில் உள்ள, குகி இனத்தவர் அதிகம் வசிக்கும் சாசேட் கிராமத்தில் 22 வயது இளைஞரும், 42 வயது பெண்ணும் கொல்லப்பட்டனர்.

ஐந்து குழந்தைகளின் தாயான அந்தப் பெண், வெள்ளிக்கிழமை இரவு கழுத்துப் பகுதியில் சுடப்பட்டு சில நிமிடங்களிலேயே பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது படுகொலையைத் தொடர்ந்து குகி மற்றும் நாகா ஆயுதக் குழுக்களுக்கு இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இது சனிக்கிழமை காலை வரையிலும் நீடித்தது. இந்த மோதலின்போது அந்த இளைஞர் கொல்லப்பட்டார்.

10 வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. மேலும் வன்முறை பரவுவதைத் தடுக்க, சாசேட் காவல் நிலைய வாயில் சந்திப்பைச் சுற்றியுள்ள 400 மீட்டர் சுற்றளவு வரை மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இதனிடையே உக்ருல் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், சந்தீப் ராய் (40) என்ற நபர் செபு யாலேன் அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகள் அவரது வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் பலியானார்.

அவர் ஓட்டிச் சென்ற நான்கு சக்கர வாகனத்திற்குள்ளேயே அவர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காங்போக்பி மாவட்டத்தில் உள்ள மகுய் அஷாங் மற்றும் டபோன் ஆகிய இடங்களிலும் ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குகி மற்றும் நாகா சமூகத்தினரிடையே வன்முறை வெடித்ததிலிருந்து, 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் ஏராளமான வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. இந்த வன்முறையானது முக்கியமாக உக்ருல், காம்ஜோங், காங்போக்பி, டமெங்லாங் மற்றும் நோனி ஆகிய மாவட்டங்களிலும், சேனாபதி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Three people were killed in fresh clashes between armed groups in Manipur's Kamjong and Ukhrul districts, officials said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.