பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

அமிர்தசரஸில் காவல் உதவி ஆய்வாளர் மீது துப்பாக்கிச்சூடு

அமிர்தசரஸில் காவல் உதவி ஆய்வாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியது பற்றி...

Assistant sub-inspector shot at in Punjab's Amritsar

துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளர்.

Published On :

அமிர்தசரஸில் காவல் உதவி ஆய்வாளர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் வந்த 3 மர்ம நபர்கள், காவல் உதவி ஆய்வாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸார் திங்கள்கிழமை தெரிவித்தனர். இதில் அமிர்தசரஸில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் சுக்‌செயின் சிங்கின் இடது கையில் குண்டு காயம் ஏற்பட்டது.

பணியை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அமிர்தசரசில் உள்ள ஜக்தேவ் குர்த் கிராமம் அருகில் அவர் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இருசக்கர வாகனத்தில் சென்ற சுக்‌செயின் சிங், சிவில் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அமிர்தசரசில் உள்ள மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுக்‌செயின் சிங், தான் வீடு திரும்பும் வழியில் பின்னால் வந்த மூவர் தன்னை நோக்கிச் சுட்டதாகத் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்தச் சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் அதிகாரி தெரிவித்தார். கடந்த மாதம் காவல் உதவி ஆய்வாளர் ஹர்ஜித் சிங் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தச் சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், அமிர்தசரசில் உள்ள பக்தான்வாலா தானியச் சந்தையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரால் காவல் உதவி ஆய்வாளர் ஹர்ஜித் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.

Summary

An assistant sub-inspector of Punjab Police was shot at by three motorcycle-borne assailants in Amritsar on Sunday evening, police said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.