திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு!

சாலை மேம்பாட்டுத் திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர் இடம்பெற்ற வழக்கில் திடீர் திருப்பம்

Gyanesh Kumar

ஞானேஷ் குமார் - கோப்புப்படம்

Published On :

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக 2006ஆம் ஆண்டு கேரளத்தில் பதியப்பட்ட லஞ்ச முறைகேடு வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.

2006ஆம் ஆண்டு கேரளத்தில், உலக வங்கி சாலை அமைக்கும் திட்டத்தின்போது, மலேசிய பொறியாளரின் தற்கொலைக் குறிப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவைச் சேர்ந்த லீ சீ பீன், தன்னுடைய மனைவி மற்றும் நிறுவன அதிகாரிக்கு என தனித்தனியாக தற்கொலைக் கடிதம் எழுதியிருந்த நிலையில், இரண்டிலுமே, லஞ்சம் கொடுக்க மறுத்ததால் தன்னை ஞானேஷ் குமார் துன்புறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் மிகவும் முக்கியமானது, அதனால், மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னிதலா தெரிவித்திருப்பதோடு, முதல்கட்ட விசாரணையில், ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளார்.

கேரள மாநில போக்குவரத்துத் துறை, உலக வங்கியுடன் இணைந்து சாலைகளை மேம்படுத்தும் திட்டம் 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போது மலேசியா மற்றும் கொச்சியைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன் திட்ட தலைவராக லீ நியமிக்கப்பட்டார். இந்த திட்டம் பாதியில் இருந்தபோதே, மலேசியா திரும்பிய லீ தற்கொலை செய்துகொண்டு மரணமடைந்தார்.

பொதுப் பணித் துறை அதிகாரிகள், எந்தக் காரணமும் இன்றி, செலவினத் தொகையை வழங்க மறுப்பதாகவும், லஞ்சம் கொடுக்க மறுத்ததால், தன்னை துன்புறுத்துவதாகவும் தற்கொலைக் குறிப்பில் பதிவு செய்திருந்தார். அப்போது கேரள பொதுப் பணித்துறை செயலராக ஞானேஷ்குமார் இருந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டின் கீழ், ஞானேஷ்குமார் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால், விசாரணை முழுமையடையாமல் விட்டுவிடப்பட்டது. இது குறித்து பேசிய சென்னிதலா, ஞானேஷ்குமார் பதவியிலிருந்தபோது, அந்தத் துறையில் ஒரு தவறு நடந்துள்ளது. எனவே, இதனை விசாரித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தை நிரூபிக்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.