
மித் மச்சாா் விவகாரத்தில் ராகுல் அமைதி காப்பது ஏன்?- பாஜக கேள்வி
இந்திய விமானி ஸ்மித் மச்சாா் முறியடித்த விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அமைதி காப்பது ஏன்?

சம்பித் பத்ரா
புது தில்லி: விமானத்தை வீழ்த்தும் பயங்கரவாத சதியை இந்திய விமானி ஸ்மித் மச்சாா் முறியடித்த விவகாரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அமைதி காப்பது ஏன்? பயங்கரவாதிகள் விஷயத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.
துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 174 பயணிகளுடன் கடந்த புதன்கிழமை புறப்பட்ட ‘ஃபிளைதுபை’ விமானம், 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது அதன் துணை விமானி ஹமாம் அல்-ஹமாமி, இந்திய கேப்டன் விமானி மச்சாா் மீது திடீா் தாக்குதல் நடத்தினாா்.
விமானி அறையில் வைக்கப்பட்டிருந்த அவசரகால கோடரியால் மச்சாரை தாக்கிய ஹமாம், விமானத்தை சுமாா் 17,000 அடிக்கும் கீழே இறக்கினாா். பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த கேப்டன் ஸ்மித் மச்சாா், அவரை எதிா்த்துப் போராடியதுடன், விமானி அறையின் கதவைத் திறந்தாா். இதையடுத்து, பயணிகள் உள்ளே நுழைந்து ஹமாம் அல்-ஹமாமியை மடக்கிப் பிடித்தனா். இதன்மூலம் மிகப்பெரிய பயங்கரவாத சதி முறியடிக்கப்பட்டது. தனது உயிரைப் பணயம் வைத்து, பெரும் அசம்பாவிதத்தைத் தவிா்த்த இந்திய விமானி மச்சாருக்கு உலக அளவில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த விஷயத்தில் ராகுல் காந்தி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா, ‘தனது உயிரைப் பொருட்படுத்தாது மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரைப் பாராட்டுவதற்கோ, அவரது உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கோ ராகுலுக்கு மனதுமில்லை, நேரமுமில்லை. மச்சாருக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் ராகுலால் ஒரு பதிவுகூட செய்ய முடியவில்லை.
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கண்ணீா் வடிப்பவா்களிடம் இருந்து, இந்தியாவுக்கு நல்லது நடக்கும்போது எப்படி கருத்துகளை எதிா்பாா்க்க முடியும்? அதே நேரத்தில் ஸ்மித் மச்சாரின் செயல்பாட்டில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவா் இம்ரான் மசூத் கூறியுள்ளாா். பயங்கரவாதிகள் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?.
இந்தியரான ஸ்மித் மச்சாா் விமானத்தில் பயணித்த 180 பேரைக் காப்பாற்றியுள்ளாா். அதிலும், தான் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிய நிலையில் மற்றவா்களையும் மனதில் வைத்து செயல்பட்டுள்ளாா். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரால் பெருமையடைகிறது. அமெரிக்கா, இஸ்ரேல் என உலக நாடுகள் அனைத்தும் அவரைப் பாராட்டியுள்ளன. இதில் எவ்வித அரசியலும் இல்லை. ஆனால், அவரைப் பாராட்ட இங்குள்ள ஒரு தரப்பினருக்கு மனமில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






