2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

விமானி ஸ்மித் மச்சார் உடல்நிலையில் சீரான முன்னேற்றம்!

ஃபிளைதுபை விமானத்தில் சக விமானியால் தக்கப்பட்ட விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தகவல்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை பெற்றுவரும் ஸ்மித் மச்சாரை சந்தித்த துபை பட்டத்து இளவரசர்

Published On :

ஃபிளைதுபை விமானத்தில் சக விமானியால் தக்கப்பட்ட விமானி ஸ்மித் மச்சாரின் உடல்நிலை சீராக உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் இன்று (அக். 6) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''கேப்டன் ஸ்மித் தொடர்ந்து சீரான முன்னேற்றம் அடைந்து வருகிறார்; அவரது உடல்நிலை தேறி வருகிறது. தூதரகம் அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து நெருங்கிய தொடர்பில் இருந்து, சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது.

அவரது நலனுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு, அவர் விரைவில் முழுமையாகக் குணமடைய வாழ்த்துகிறோம்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி புறப்பட்ட விமானத்தில் சக விமானியால் கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்ட போதும் துணிவுடன் போராடிய இந்திய விமானி ஸ்மித் மச்சார் பயணிகளின் உயிரைக் காத்தார்.

விமானத்தை வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்க முயன்ற அந்த விமானியைப் பயணிகள் மடக்கிப் பிடித்ததால், துணை விமானிகளால் சவூதி அரேபியாவில் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Story image

Summary

Steady improvement in Pilot Smith Machar's health condition

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER