9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

கைது செய்து அழைத்துச்செல்லப்படும் ராகுல் காந்தி - பிடிஐ

Published On :

தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தியை காவல் துறையினர் கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதால், அகில இந்திய வானொலி நிலையத்தில் உள்ளிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

காலை முதல் தொடர்ந்து 9 மணி நேரமாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ராகுல் காந்தி தற்போது கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தியுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வானொலி நிலையத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு நரேந்திர மோடியும் அமித் ஷாவும் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக ராகுல் விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தில்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் நோக்கி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பதாகைகளுடன் இன்று (அக். 6) பேரணியாகச் சென்றனர்.

தேர்தல் ஆணையம் செல்லும் வழியில் நாடாளுமன்ற சாலையில் நிதி ஆயோக் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் மீது ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கிருந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்குள் அனுமதியின்றி உள்ளே நுழைந்தனர். காங்கிரஸ் உறுப்பினர்களும் உள்ளே நுழைந்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Summary

INDIA bloc MPs are protesting against CEC Gyanesh Kumar rahul gandhi arrest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.