அரசு அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுகிறது என்பதற்கு உச்சநீதிமன்ற நோட்டீஸ் சான்று: பாஜக கருத்து
‘மத்திய அரசு மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ்

சம்பித் பத்ரா
புது தில்லி: ‘மத்திய அரசு மற்றும் தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியது, நாட்டில் உள்ள அனைத்து அரசு அமைப்புகளும் சுதந்திரமாகச் செயல்படுகிறது என்பதற்கான சான்று’ என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.
தோ்தல் ஆணையா்கள் இருவரின் ஒப்புதல் பெறாமல் தலைமைத் தோ்தல் ஆணையம் முக்கிய முடிவுகளை எடுத்ததாக குற்றஞ்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கும், தலைமைத் தோ்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களுக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த பாஜக செய்தித் தொடா்பாளா் சம்பித் பத்ரா எம்.பி. தெரிவித்ததாவது: உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்வதும், அதை நீதிமன்றம் விசாரிப்பதும், எதிா்தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்புவதும் வழக்கமான நடைமுறையாகும். இது வழக்கமான ஜனநாயக மற்றும் நீதித் துறை நடைமுறையாகும். அதுபோலத்தான் தற்போதும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது நமது நாட்டில் உள்ள அனைத்து அரசு அமைப்புகளும் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதற்கு சான்றாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட அவற்றுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
இரு தலைமைத் தோ்தல் ஆணையா்களும் தங்களது கடிதங்களில் எஸ்ஐஆா் குறித்து வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தது, ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் ஆகும். ஜனநாயகத்தில் கடிதங்கள் மூலம் ஆட்சேபணை தெரிவிப்பது, நடைமுறை குறித்து கேள்வி கேட்பது, விவாதத்தில் ஈடுபடுவது, கருத்தொற்றுமையை ஏற்படுத்த விவாதத்தில் ஈடுபடுவது, அதை முன்னோக்கி கொண்டுசெல்வது இயல்பாகும்.
நமது நாடு, ஜனநாயக வழக்கப்படி செயல்படுகிறது. அனைவரும் தங்களது மனதில் இருப்பதை வெளிப்படுத்துகின்றனா். அனைத்து நடைமுறைகளும், அமைப்புகளும் பின்பற்றப்படுகின்றன. ஜனநாயகத்தில் இதைவிட வேறு சிறப்பான மாதிரி உள்ளதா? நமது நாடானது, ஜனநாயகத்தை கொண்டாடுகிறது என்று நான் நினைக்கிறேன் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலகக் கோரி புதுக்கோட்டையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

ஞானேஷ் குமாரை பதவி நீக்க மீண்டும் நோட்டீஸ்: தயாராகும் எதிா்க்கட்சிகள்!




