
ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நாளை ‘செருப்பு போராட்டம்’! பிரகாஷ் ராஜ் பங்கேற்பு!
ஞானேஷ் குமாருக்கு எதிராக சிஜேபி நடத்தும் செருப்பு போராட்டம் பற்றி...

அபிஜீத் தீப்கே, பிரகாஷ் ராஜ் - ANI
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நாளை பெங்களூருவில் செருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் முறைகேடு செய்த குற்றத்துக்காக, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கி, கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
கடந்த அக்டோபர் 2ஆம் தேதி மும்பை சிவாஜி பூங்காவில் பிரம்மாண்ட போராட்டத்தை சிஜேபி கட்சியினர் நடத்தினர். வருகின்ற அக். 10 ஆம் தேதி தில்லி, ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, கர்நாடக் மாநிலம், பெங்களூருவில் உள்ள சுதந்திரப் பூங்காவில் நாளை (அக். 8) காலை 10.30 மணியளவில் செருப்புப் போராட்டம் நடத்தப் போவதாக சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் ரங்கா அறிவித்துள்ளார்.
Action packed Thurs for Bengaluru!
— Ashutosh Ranka (@AshutoshRanka) October 6, 2026
Freedom Park, 10:30AM Onwards.
This Thurs, Oct 8, we will be attending the Peopleâs tribunal on SIR, interacting with Kannadigas who have been wrongfully removed from the voters list.
This would be followed by a âChappal protestâ in⦠pic.twitter.com/6OZKxhHz0t
இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், “மாநிலம் முழுவதிலும் இருந்து எஸ்.ஐ.ஆரால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். நமது ஜனநாயகத்தைக் காப்பதற்கான இந்தப் போராட்டத்தில் இணையுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த போராட்டத்தில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
CJP’s ‘Slipper Protest’ against Gyanesh Kumar! Prakash Raj participates!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






