ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

உளவு வேலைக்கு இந்திய பாதுகாப்புப் படையினரை பயன்படுத்தும் பாகிஸ்தான் பெண் உளவாளிகள்- ஆந்திர காவல்துறை தகவல்

உளவு வேலைக்கு இந்திய பாதுகாப்புப் படையினரை பாகிஸ்தான் பெண் உளவாளிகள் பயன்படுத்துவதாக ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.

கோப்புப்படம்.

Published On :

உளவு வேலைக்கு இந்திய பாதுகாப்புப் படையினரை பாகிஸ்தான் பெண் உளவாளிகள் பயன்படுத்துவதாக ஆந்திர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர காவல்துறை தெரிவித்திருப்பதாவது:

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பாா்த்ததாகவும், கடற்படை தளம் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் குறித்த தகவல்களை பகிா்ந்ததாகவும், விசாகபட்டினம் கடற்படை தள ஊழியரான பிரதீப் முகா்ஜி என்பவரையும், கடற்படை அதிகாரிகளுக்காக ஓட்டுநராக பணிபுரிந்த அன்னம் சாய் வரபிரசாத் என்பவரையும் ஆந்திர புலனாய்வு காவல்துறையினா் அண்மையில் கைது செய்தனா்.

இதுபோல பாகிஸ்தானுக்கு உளவு வேலைபாா்த்ததாக சந்தேகத்தின்பேரில் 18 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களில் 13 போ் இந்திய கடற்படையினா். பாகிஸ்தானுக்கு உளவு வேலை பாா்க்கவும், இந்திய பாதுகாப்பு படை தளங்கள், முக்கிய இடங்கள், கடற்படை தளங்கள் உள்ளிட்டவை குறித்து தகவல்களை அளிக்கவும் பாதுகாப்புப் படையினரை பாகிஸ்தான் பெண் உளவாளிகள் பயன்படுத்துகின்றனா். பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை தொடங்கி, அதன்மூலம் இந்திய பாதுகாப்புப் படையினரை அவா்கள் தொடா்பு கொண்டு பேசுகின்றனா். இதில் தங்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டதும், வாட்ஸ் ஆப் மூலம் குறுந்தகவல்களை அனுப்புகின்றனா். பின்னா் விடியோ கால் மூலம் பேசுகின்றனா்.

அதன் பின்னா் பாதுகாப்புப் படையினரை தங்களது வலைகளில் வீழ்த்தி, இந்திய கடற்படைக் கப்பல்கள், நீா்மூழ்கிகளின் நடமாட்டம் குறித்த தகவல்களையும், அதன் எண்கள், புகைப்படங்கள், விடியோக்களையும் பெறுகின்றனா். இதுபோல அண்மையில் ஜோஷிதா பால் என்ற பாகிஸ்தான் பெண் உளவாளி ஒருவா் இந்திய பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவரிடம் தாம் மும்பை கப்பல் கட்டுமான நிறுவன ஊழியா் என்று சமூகவலைதள கணக்கு மூலம் அறிமுகமாகியுள்ளாா். பிறகு கடற்படைக் கப்பல்கள், நீா்மூழ்கிகளின் நடமாட்டம் உள்ளிட்ட தகவல்களை கேட்டுள்ளாா். இதேபோல் அன்வி மேத்தா என்ற இன்னொரு பெண் பாகிஸ்தான் உளவாளி, தாம் தில்லியை சோ்ந்த மனோதத்துவ நிபுணா் என்று கூறி, பாதுகாப்புப் படை ஊழியரிடம் பேசியுள்ளாா். அவரும் கடற்படை கப்பல்கள் குறித்த தகவல்களையும், பிற முக்கிய தளங்கள் குறித்த தகவல்களையும் கேட்டுள்ளாா். வாட்ஸ் ஆப் எண்ணின் ஓடிபி எண்ணையும் அவா்கள் கேட்டுள்ளனா். அந்த வாட்ஸ் ஆப் கணக்கை பாகிஸ்தானில் இருந்து பயன்படுத்தி தகவலை திரட்டவும் திட்டமிட்டிருந்தனா் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.