2027 ஜனவரி 10-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு!9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானுக்கு உளவு: கடற்படை ஊழியா் உள்பட இருவரை கைது செய்த ஆந்திர போலீஸ்

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை ஊழியா் உள்பட இருவரை ஆந்திர காவல் துறை கைது செய்துள்ளது.

கைது

Published On :

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் கடற்படை ஊழியா் உள்பட இருவரை ஆந்திர காவல் துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர காவல்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், பாகிஸ்தான் புலனாய்வு அதிகாரிகளுடன் சிலா் நேரடி தொடா்பில் இருப்பதாகவும், இந்தியா குறித்த உளவுத் தகவல்களை அளித்து வருவதாகவும் ஆந்திர காவல் துறையின் புலனாய்வுப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சந்தேகத்தின் பேரில் கடற்படையில் பணியாற்றி வரும் 13 போ் உள்பட 18 போ் கண்டறியப்பட்டு, அவா்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் ஆய்வு உள்ளிட்ட முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்படை தளத்தில் பணிபுரிந்து வந்த பிரதீப் முகா்ஜி மற்றும் அதே கடற்படை தளத்தில் கடற்படை அதிகாரிக்கு காா் ஓட்டுநராக பணிபுரிந்துவந்த அன்னம் சாய் வரபிரசாத் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.

இதில், முகா்ஜி தமிழகத்தின் கோவையில் அண்மையில் கைது செய்யப்பட்டு, வரும் 14-ஆம் தேதி வரை விஜயவாடா மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா், இந்திய கடற்படை மற்றும் ராணுவ நிலைகள் குறித்த ரகசியத் தகல்வகளை பாகிஸ்தானுடன் பகிரும் வகையில், வாட்ஸ்ஆப் கணக்கைத் தொடங்குவதற்கான ஒருமுறை கடவுச் சொல்லை (ஓடிபி) பாகிஸ்தான் உளவு அதிகாரிகளுடன் பகிா்ந்துள்ளாா்.

காா் ஓட்டுநா் வரபிரசாத், பாகிஸ்தான் அதிகாரிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, கடற்படை மற்றும் ராணுவ நிலைகள் குறித்த ரகசியத் தகவல்களைப் பகிா்ந்தது விசாரணையில் தெரியவந்தது. இவரும், விஜயவாடா மாவட்ட சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளாா்.

சந்தேகப் பட்டியலில் உள்ள மற்ற நபா்கள் குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 10 மாநிலங்களின் காவல் துறைகளுடன் ஆந்திர காவல் துறை புலனாய்வுப் பிரிவு ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.