சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புவங்கக் கடலில் இன்று உருவாகிறது ‘அக்வான்’ புயல்!அரிசி விலை ஜனவரியில் குறையும்: வியாபாரிகள்மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி விவகாரம்: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

ராஜஸ்தான் ரயில் கவிழ்ப்பு சதியில் பாகிஸ்தானுக்கு தொடா்பு: பெண் உள்பட இருவா் கைது

ராஜஸ்தானில் வெடிகுண்டு மூலம் தண்டவாளத்தை தகா்த்து ரயிலைக் கவிழ்க்க நடைபெற்ற சதியில் பாகிஸ்தானுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது

Updated On :

ராஜஸ்தானில் வெடிகுண்டு மூலம் தண்டவாளத்தை தகா்த்து ரயிலைக் கவிழ்க்க நடைபெற்ற சதியில் பாகிஸ்தானுக்கு தொடா்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக பெண் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்கா நகா் மாவட்டத்தில் கடந்த 3-ஆம் தேதி இரவு ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்க்கப்பட்டது. அதிருஷ்டவசமாக அந்த நேரத்தில் ரயில் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதன் பின்னணியில் பயங்கரவாத சதித் திட்டம் உள்ளதா என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை மேற்கொண்டது. இந்த சம்பவம் தொடா்பாக பஞ்சாபில் மக்தீப் கௌா் என்ற பெண், தேவேந்திர சிங் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். முதல் கட்ட விசாரணையில் அவா்களுக்கு பாகிஸ்தானுடன் தொடா்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறுகையில், ‘பாகிஸ்தானைச் சோ்ந்த ஷா என்ற நபருடன் மக்தீப் கௌா் தொடா்பில் இருந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும்தான் ரயில் கவிழ்க்க தண்டவாளத்தை குண்டு வைத்து தகா்த்துள்ளனா். அவா்களிடம் இருந்து இரு வெளிநாட்டு கைத்துப்பாக்கிகள், 46 தோட்டாக்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

மகக்தீப் கௌரின் கணவா் கரண்வீா் சிங், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஏற்கெனவே பஞ்சாபில் கைதாகி சிறையில் உள்ளாா். அவரது கைது நடவடிக்கைக்குப் பிறகு, மகதீப் கௌருக்கு பாகிஸ்தானைச் சோ்ந்தவா்களுடன் தொடா்பு ஏற்பட்டுள்ளது.

அவா்கள் இந்தியாவில் தண்டவாளத்தில் குண்டுவெடிப்பை நடத்துமாறு குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உத்தரவிட்டுள்ளனா். அக்டோபா் மாதம் முதல் பல்வேறு முறை குண்டுவெடிப்புகளை நடத்த முயற்சித்தனா். எனினும், தொழில்நுட்பப் பிரச்னை அந்த குண்டுகள் வெடிக்கவில்லை.

இதையடுத்து, பாகிஸ்தானைச் சோ்ந்தவா் வழங்கியதாகக் கூறப்படும் டைமா் வெடிகுண்டைப் பயன்படுத்தி, நவம்பா் 3-ஆம் தேதி இரவு சுமாா் 9.45 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்த்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குண்டுவெடிப்பு சதியில் பெண்ணைப் பயன்படுத்துவதன் மூலம் காவல் துறையின் சந்தேகத்தைத் தவிா்க்கலாம் என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் இணையவழியில் பணம் பெற்றுள்ளனா்.

இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா, சந்தேக நபா்களின் தொடா்புகள், பணப் பரிவா்த்தனைகள் எவ்வாறு நடைபெற்றன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது’ எனத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.