முதல்வர் விஜய் ஒரு போலி பெரியாரிஸ்ட்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!போதைப்பொருள்களுக்கும் வன்கொடுமைகளுக்கும் நடுவேதான் போட்டி: மு.க. ஸ்டாலின்ஃபேஷனுக்காக பெரியாரை கொள்கைத் தலைவராக வைத்துள்ளது தவெக! ஜோசியத்தை நம்பியே ஆட்சி! மு.க. ஸ்டாலின்ஷேக் ஹசீனா கட்சியினருக்கு எதிராக வன்முறை! 30 வீடுகளுக்குத் தீவைப்பு!ஐஐடி மாணவர்களுக்கு இணையான அங்கீகாரம் ஐடிஐ மாணவர்களுக்கு கிடைக்கும்: மோடிகள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் இன்னும் எதற்காக மௌனம் காக்கிறார் முதல்வர்? டிடிவி தினகரன் கேள்வி தங்கம் விலை சரிவு; வணிகர்களை நஷ்டத்தில் இருந்து காப்பாற்றிய பிரதமர் மோடி: பாஜக பெருமிதம்! தவெக ஆட்சியில் டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்: எடப்பாடி பழனிசாமி வானிலை: சென்னையில் நாளை(நவ.23) கனமழைக்கு வாய்ப்பு! பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பொது வாழ்வில் 25 ஆண்டுகள்... விநாயகர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்!

பொது வாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

தில்லி ஸ்ரீ விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.

Updated On :

பொது வாழ்வில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி, தில்லியில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

கடந்த 2001-ஆம் ஆண்டு அக். 7-ஆம் தேதி முதன்முறையாக குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி தன்னுடைய பொது வாழ்வில் வெள்ளி விழா எட்டியிருக்கிறார்.

2001 ஆம் ஆண்டில் முதல்வரான மோடி, தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தார். அதன்பின்னர், 2014-ல் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்று இன்றுவரை தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்வதை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அக். 7-ஆம் தேதி பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

அதே வேளையில், அடுத்தாண்டு (2027) வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தீவிரக் கட்சி ஆலோசனைகளிலும் பாஜக இறங்கியுள்ளது.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக, பிரதமர் மோடியின் பிறந்த ஊரான குஜராத்தின் 'வாத்நகர்' மற்றும் அவரின் நாடாளுமன்றத் தொகுதியான 'வாரணாசி' ஆகிய இரண்டையும் இணைக்கும் இருவழி 'சேவா யாத்திரைகள்' நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அரசியல் பொது வாழ்வில் 25 ஆண்டுகளை எட்டியதையொட்டி, புதன்கிழமை காலை தில்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி, ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தார்.

Summary

Prime Minister Narendra Modi became Gujarat chief minister on October 7, 2001, and remained in office for more than 12 years before moving to the national stage in 2014.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.