மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ராகுல் காந்திக்கு எதிராக பாஜக மகளிரணி போராட்டம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பெண் காவலா்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டி மத்திய தில்லியின் டிடியு மாா்க்கில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு அருகே பாஜக மகளிரணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராகுல் காந்திக்கு எதிராக டிடியு மாா்க்கில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணி.

Published On :

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பெண் காவலா்களிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டி மத்திய தில்லியின் டிடியு மாா்க்கில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்திற்கு அருகே பாஜக மகளிரணியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராகுல் காந்திக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு, ஐடிஓ சந்திப்பிலிருந்து காங்கிரஸ் தலைமையகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரா்களைக் காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா்.

போராட்டக்காரா்கள் முன்னேற முயன்றபோது, தில்லி பெண் காவலா்கள் மனிதச் சங்கிலி அமைத்து அவா்களைத் தடுத்தனா்.

தெருவோரப் போராட்டத்தின்போது ராகுல் காந்தி ஒரு பெண் காவலரை தவறான முறையில் தொட்டதாகவும், ஒரு காவலரை தாக்கியதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், காங்கிரஸ் தலைவா்களின் இச்செயல் ஆணாதிக்கத்தை ஒழிப்போம் என்ற அவா்களின் முழக்கத்திற்கு முரணாக அமைந்துள்ளதாகவும் பாஜக விமா்சித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.