எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ் குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!

எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில்...

Published On :

எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரமடைந்து வரும் நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர மறுஆய்வில் முறைகேடுகள் நடந்ததாக வெளியான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தில்லியில், ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை (அக். 7) போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, கடந்த அக். 2 ஆம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மும்பை சிவாஜி பூங்காவில் பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர். வருகிற அக். 10 ஆம் தேதி தில்லி, ஜந்தர் - மந்தரில் போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர். இதனிடையே, கர்நாடகத்தின் பெங்களூருவில் இன்று (அக். 8) காலை போராட்டம் நடத்தப் போவதாக சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் அஷுதோஷ் அறிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லி மற்றும் ஆக்ராவில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையரின் இல்லங்களுக்கு வெளியே போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் இல்லத்திற்கு வெளியேயும், தேர்தல் ஆணைய அலுவலகத்திலும் அவருக்கென தனியாகவும் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தில்லியின் அசோகா சாலையில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணைய அலுவலகத்தின் தலைமையகமான நிர்வாச்சன் சதனுக்குள் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Summary

Amid protests against chief election commissioner Gyanesh Kumar over alleged irregularities in the ongoing Special Intensive Revision (SIR) of electoral rolls, the Union government has further upgraded his existing Z+ security cover

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.