
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவு: கனிமொழி எம்.பி. இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்திருப்பது குறித்து...

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவு - எக்ஸ்
அவரது சிறப்பான படைப்புகளின் வாயிலாக அவரது நினைவுகள் என்றும் நிலைத்திருக்கட்டும் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் (75) வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.
கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் மயங்கிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், மருத்துவமனை கொண்டுச் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
நானா படேகரின் மறைவுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கனிமொழி இரங்கல்
பிரபல மூத்த நடிகர் நானா படேகர் மறைவுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பிரபல மூத்த நடிகர் நானா படேகர் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது சிறப்பான நடிப்பு, தனித்துவமான ஆளுமை மற்றும் இந்தி மற்றும் பிராந்தியத் திரைப்படத் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஆகியவை நம் நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும்.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது சிறப்பான படைப்புகளின் வாயிலாக அவரது நினைவுகள் என்றும் நிலைத்திருக்கட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
My heartfelt condolences to his family, friends and admirers. May his memory live on through his remarkable body of work.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





