தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல்! காங்கிரஸ் விமர்சனம்

நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசரநிலை அமல் என காங்கிரஸ் விமர்சனம்...

Rahul gandhi

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் ராகுல் காந்தியை கைது செய்த காவல்துறை - ANI

Published On :

நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசரநிலையை பாஜக அமல்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் வியாழக்கிழமை விமர்சித்துள்ளது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அவா் பதவி விலகக்கோரி, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

தொடர்ந்து, தில்லி ஜந்தா் மந்தரில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பேருந்தில் சென்றனர். அந்த பேருந்துகளை காவல்துறையினா் நடுவழியில் தடுத்து நிறுத்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களை நேற்றிரவே காவல்துறையினர் விடுவித்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜேந்திர பால் கெளதம் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

”இன்று, நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசரநிலையை பாஜக அமல்படுத்தியுள்ளது.

ஜந்தர் மந்தரில் எந்த போராட்டத்தை நடத்த வேண்டுமென்றாலும் குறைந்தது 10 நாள்கள் முன்பே அதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற செய்தி இன்றைய நாளிதழில் வெளியாகியுள்ளது.

யாரேனும் மனிதாபிமானமற்ற கொடுமைகளுக்கு உள்ளானாலோ, படுகொலை செய்யப்பட்டாலோ அல்லது ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ, மக்கள் தங்கள் குரலை எழுப்புவதற்கு 10 நாள்கள் காத்திருக்க வேண்டுமா?

ஒரு சுதந்திர நாட்டில், நமது அடிப்படை உரிமைகளைச் செயல்படுத்துவதற்குக்கூட 10 நாள்களுக்கு முன்பே அரசாங்கத்திடம் அனுமதி கோர வேண்டுமா?

அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்காக அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு நமக்கு வழங்கியுள்ளது.

ஜனநாயகத்தைக் கொல்வதற்கு நாட்டின் புலனாய்வு அமைப்புகளையும் தேர்தல் ஆணையத்தையும் பாஜக பயன்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு நாள்களில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியிடம் தில்லி காவல்துறை நடந்துகொண்ட விதம் வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

Undeclared emergency in force across the country! Congress criticizes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.