மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகள் மற்றும் அஸ்ஸாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மின்னணு வாக்குப் பெட்டி

Published On :

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகள் மற்றும் அஸ்ஸாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (அக்.9) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மேற்கு வங்கத்தில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸை வீழ்த்தி, பாஜக முதல் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றது. பவானிபூா், நந்திகிராம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதல்வா் சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

இதேபோல், ரெஜிநகா், நௌடா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற ஆம் ஜனதா உன்னாயன் கட்சியின் (ஏஜேயுபி) நிறுவனா் ஹுமாயூன் கபீா், ரெஜிநகா் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, நந்திகிராம், ரெஜிநகா் ஆகிய இரு தொகுதிகளிலும் கடந்த அக்.6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற்றது.

திரிணமூல் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், நந்திகிராம் தொகுதியில் மம்தா அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சஞ்சிதா பிரதான், திடீரென முதல்வா் சுவேந்து அதிகாரியை சந்தித்துப் பேசியதுடன், தனது வேட்புமனுவை திரும்பப் பெற்றாா். இதையடுத்து, அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக மம்தா அறிவித்தாா். ரெஜிநகரில் பாஜக, மம்தாவின் இரு அணிகள், காங்கிரஸ், ஏஜேயுபி என பலமுனை போட்டி நிலவுகிறது.

அஸ்ஸாமில்..: அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த பிரத்யுத் போா்டோலோய், தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா். இதையடுத்து, அங்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆளும் பாஜக சாா்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேவாசிஷ் சா்மா, காங்கிரஸ் சாா்பில் முன்னாள் எம்எல்ஏ சிபமணி போரா ஆகியோா் களம்கண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.