அக்.10-ல் சிஜேபி போராட்டத்தில் நாம் பங்கேற்கக் கூடும்! - மமதா பானர்ஜி தகவல்!
அக்.10 ஆம் தேதி ஞானேஷ் குமாருக்கு எதிரான சிஜேபியின் தில்லி போராட்டத்தில் மமதா பானர்ஜி பங்கேற்கலாம் என எதிர்பார்ப்பு...

மமதா பானர்ஜி - ANI
தில்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வரும் அக்.10 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி நடத்தும் போராட்டத்தில் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளில் சட்டவிரோதமான முறையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் வரும் அக்.10 ஆம் தேதி கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் தான் பங்கேற்கக் கூடும் என மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் இன்று (அக்.8) மமதா பானர்ஜி பேசுகையில்,
“ஜந்தர் மந்தரில் வரும் அக்.10 ஆம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கக் கூடும். இப்போது எதையுமே உறுதியாகச் சொல்ல முடியாது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, சிஜேபி போராட்டங்களுக்கு மமதா பானர்ஜி தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்தியா கூட்டணியின் போராட்டத்தில் பங்கேற்க அவர் தில்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Mamata Banerjee is expected to participate in a protest organized by the CJP against CEC Gyanesh Kumar in Delhi on October 10.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


