தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு நரேந்திர மோடி பெயர்!

நொய்டா சர்வதேச விமான நிலையத்துக்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்படுவது பற்றி...

noida modi

நொய்டா சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் மோடி (கோப்புப்படம்) - ANI

Published On :

நொய்டா சர்வதேச விமான நிலையத்தை ’நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

கடந்தாண்டு மார்ச் 28 ஆம் தேதி, லக்னெள அருகே ஜெவாரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். பின்னர், ஜூன் 15 முதல் விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த விமான நிலையத்தின் பெயரை ’நரேந்திர மோடி சர்வதேச விமான நிலையம்’ என மாற்றுவதற்கு உ.பி. அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், லக்னெள விமான நிலையம் உத்தரப் பிரதேசத்தின் மிகப்பெரிய விமான நிலையமாகவும், நாட்டின் முக்கிய விமானப் போக்குவரத்து மையமாகவும் உருவெடுக்கவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த விமானம் ரூ. 11,282 கோடி செலவில் கட்டப்பட்டது. முதல்கட்டமாக ஆண்டுக்கு 1.2 கோடி பயணிகளை கையாண்டு வருகின்றது. இன்னும் சில ஆண்டுகளில் 7 கோடி பயணிகளை கையாளும் வகையில் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இங்கு அகலமான விமானங்களைக் கையாளும் 3,900 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை நவீன சிக்னல் அமைப்புகளுடன் இடம்பெற்றுள்ளது.

இந்த விமான நிலையத்தில் ஒரு ஓடுபாதை மட்டுமே இருக்கும் நிலையில், இரு முனைகளிலும் ஐஎல்எஸ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதனால், காற்றின் நிலையைப் பொறுத்து எந்த திசையிலிருந்தும் விமானத்தை தரையிறக்க முடியும்.

Summary

Noida International Airport named after Narendra Modi International Airport!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER