தொடர்ந்து போராடுங்கள், நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்: ராகுல் காந்தி
இந்திய இளைஞர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்
இந்திய இளைஞர்களுடன் நாங்கள் துணை நிற்கிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) போராட்டம் நடத்தி வருகிறது.
இதில், கலந்துகொண்ட மாணவர்கள், வழக்குரைஞர்கள், இளைஞர்கள், செய்தியாளர்கள் பலரும் இன்று காலை முதல் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர்களான மமதா பானர்ஜி, அரவிந்த் கேஜரிவால், பினராயி விஜயன் ஆகியோரும் தில்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தில்லியில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக காணொலி ஒன்றை பேசி வெளியிட்டுள்ளார்.
அதில், ”நான் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நரேந்திர மோடியையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் எதிர்த்துப் போராடி வருகிறேன். உங்கள் எதிரிகளை அறிந்துகொள்வதைப் போன்று, அவர்களைப் பற்றி உள்ளும் புறமுமாக எனது உள்ளங்கையைப் போல நன்கு அறிந்து வைத்துள்ளேன்.
அவர்களின் அடிப்படை குணமே கோழைத்தனம்தான்.
இந்தக் கதையின் வில்லன்களான நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், ஞானேஷ் குமார் மற்றும் அஜித் தோவல் ஆகியோர் அவர்களைச் சுற்றியுள்ள வெளி மெல்லச் சுருங்குவதை உணர்கிறார்கள். நாம் அந்த வெளியை மூடுவோம்.
மோடி அவர்களே, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். அனைத்துக் காவல்துறையினரையும் வரவழையுங்கள்.10,000, 20,000, 50,000 என எவ்வளவு பேரை வேண்டுமானாலும் வரவழையுங்கள்.
அனைத்துத் தலைவர்களையும் கைது செய்யுங்கள். அனைத்து இளைஞர்களையும் கைது செய்யுங்கள். எங்களை அனைவரையும் கைது செய்யுங்கள்.
நாங்கள் உங்களைச் சூழ்ந்து கொண்டுள்ளோம். நாங்கள் யாரும் பின்வாங்கப் போவதில்லை.
என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள்: எங்களிடம் ஏற்கனவே தேவையான தகவல்கள் உள்ளன. நாங்கள் நம் நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்போம்.
இந்திய மக்களின் குரலைப் பாதுகாக்கப் போகிறோம். கடந்த 10-15 ஆண்டுகளில் இந்தியாவிற்கு இழைக்கப்பட்ட எதுவும் மீண்டும் நிகழாது என்பதை உறுதி செய்வோம்.
இந்திய இளைஞர்களே, உங்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து போராடுங்கள். நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.
இந்த ஆட்சியும் நமது அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்தியவர்களும் தோற்கடிக்கப்படுவதை நாம் உறுதி செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் விஜய்யை அவரது நீலாங்கரை இல்லத்தில் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
Summary
Keep fighting; we stand with you: Rahul Gandhi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


