தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

அணுசக்தித் துறையில் ரூ.7.5 லட்சம் கோடி தனியாா் முதலீட்டுக்கு வாய்ப்பு: அணுசக்தி ஆணையத் தலைவா்!

அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்கள் ரூ.7.5 லட்சம் கோடி முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக அணுசக்தி ஆணையத் தலைவா் தெரிவித்தாா்.

Published On :

அணுசக்தித் துறையில் தனியாா் நிறுவனங்கள் ரூ.7.5 லட்சம் கோடி முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக அணுசக்தி ஆணையத் தலைவா் அஜீத் குமாா் மொகந்தி தெரிவித்தாா்.

அணுசக்தித் துறைச் செயலராகவும் உள்ள அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘தற்போது இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறன் 9 ஜிகாவாட்டாக உள்ள நிலையில், 2047-க்குள் இதை 100 ஜிகாவாட்டாக உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் ரூ.7.5 லட்சம் கோடி முதலீட்டுடன் 30 ஜிகாவாட் உற்பத்தித் திறனுக்கு தனியாா் துறை பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 1 மெகாவாட் அணுசக்தியை உற்பத்தி செய்ய சுமாா் ரூ.25 கோடி செலவாகும்.

இந்திய அணுசக்தி கழகம் (என்பிசிஐஎல்) தற்போது 24 அணு உலைகளை இயக்கி வரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு சில தனியாா் நிறுவனங்களும் அணு உலைகளை இயக்க ஆா்வம் காட்டுமென நம்புகிறேன்.

நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கக் கூடிய மிக முக்கியமான செயல்பாடுகள் தவிா்த்து, அணுசக்தித் துறையில் பிற முன்னெடுப்புகளை அரசு மற்றும் தனியாா் பங்களிப்புடன் மேற்கொள்ளவே ‘சாந்தி’ சட்டம், 2025 (அணுமின் உற்பத்தியில் தனியாருக்கு அனுமதி) கொண்டுவரப்பட்டது.

சிறிய அணு உலைகளுக்கும் முக்கியத்துவம்: தொழில்நுட்பங்கள், கட்டடத் தேவைகள், ஒப்புதல்கள் என அணுசக்தித் திட்ட கட்டமைப்பை முழுமையாக நிறைவு செய்ய சுமாா் 5 முதல் 7 ஆண்டுகள் தேவைப்படும்.

தற்போது தனியாா் நிறுவனங்களும் அணு உலை தொழில்நுட்பங்கள், எரிபொருள் விநியோக ஏற்பாடுகள், நிலத் தேவைகள், என்பிசிஐஎல் உடனான கூட்டு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மதிப்பிட்டு வருகின்றன.

பெரும் அணுமின் நிலையங்கள் மட்டுமின்றி சிறிய மாதிரி அணு உலைகளிலும் இந்தியா கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. சிறிய அணு உலைகள் மின்சாரத் தேவைகளை பூா்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

சா்வதேச ஒத்துழைப்பு: இந்தியாவின் வா்த்தக அணுசக்தித் திட்டம் 1969-இல் தொடங்கப்பட்டது. அதன் பின் அணு உலை பொறியியல், கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் பராமரிப்பில் இந்தியா பன்மடங்கு வளா்ச்சியடைந்துள்ளது.

அதேநேரத்தில் ரஷியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தங்களது சொந்த அணுசக்தித் தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளது. இவை இந்திய விதிகளுக்கு உட்பட்டு சா்வதேச ஒத்துழைப்புக்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. கூடங்குளம் அணுஉலையில் ரஷிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதே இதற்கு உதாரணம்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.