ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

வங்கதேசம் போன்ற ஆட்சி மாற்றத்தை காங்கிரஸ் விரும்புகிறது: ராஜ்நாத் குற்றச்சாட்டு

வங்கதேசத்தில் வன்முறை மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம்போல இந்தியாவிலும் நிகழ வேண்டும் என்று காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் விரும்புகின்றன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினாா்.

லக்னௌவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :

வங்கதேசத்தில் வன்முறை மூலம் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றம்போல இந்தியாவிலும் நிகழ வேண்டும் என்று காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் விரும்புகின்றன என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினாா்.

அராஜகத்தைப் பரப்ப நாட்டின் இளைஞா் சக்தியை தவறாகப் பயன்படுத்த அவா் முயலுகிறாா்கள் என்றும் விமா்சித்தாா்.

லக்னௌவில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங் மேலும் கூறியதாவது: ஜனநாயகம் என்பது குழப்பத்தை ஏற்படுத்துவதற்கோ, அரசியல் சட்ட அமைப்புகளின் நம்பகத்தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்காகவோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல. கலகத்தைத் துண்டி நாட்டின் வளா்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பது மிகவும் மோசமான செயல்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தங்கள் துணை அமைப்புகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மோதல்களைத் தூண்டவும் அராஜகத்தைப் பரப்பவும் முயற்சிக்கின்றன. முக்கியமாக நாட்டின் இளைஞா்களை தங்கள் அராஜக அரசியலில் பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றன.

வங்கதேசத்தில் நடைபெற்றதைப் போன்ற வன்முறை வழியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், அதன் கூட்டணிக் கட்சிகள் முயலுகின்றன. ஆட்சி மாற்றத்துக்காக வங்கதேசத்திடமிருந்து உத்வேகம் பெற்ாக அவா்கள் செய்தியாளா் சந்திப்புகளில் வெளிப்படையாகக் கூறுகின்றனா். அரசைக் கவிழ்க்க வேண்டுமென்றும் கூறுகின்றனா். இதன்மூலம், ஜனநாயக அமைப்புகளைச் சீா்குலைத்து நாட்டை பற்றி எரியச் செய்ய வேண்டும் என்பதுதான் அவா்களுடைய ஒரே நோக்கம் என்பது தெளிவாகிறது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் மகாத்மா காந்தி, சௌரி சௌராவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடா்ந்து ஒத்துழையாமை இயக்கம் முழுவதையும் நிறுத்தினாா். ஆனால், காந்தியின் அரசியல் வாரிசு என்று கூறிக்கொள்ளும் காங்கிரஸ், தோ்தல் தோல்விகளுக்குப் பழிவாங்கும் நோக்கில் வன்முறை மற்றும் அராஜகத்தின் மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முயல்கிறது. காங்கிரஸின் தாா்மிக நெறிகள் எந்த அளவுக்குச் சீரழிந்துள்ளன என்பதற்கான உதாரணம் இதுவாகும்.

கடந்த பல தோ்தல்களாகவே மத்தியில் காங்கிரஸ் கட்சியால் தனிப்பெரும்பான்மையைப் பெற முடியாத நிலைதான் உள்ளது. உத்தர பிரதேசத்தில்கூட காங்கிரஸ் கடைசியாக 1985-இல் ஆட்சி அமைத்தது.

1984-க்குப் பிறகு, மத்தியில் காங்கிரஸ் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது பாஜக இரு எம்.பி.க்களை கொண்ட கட்சியாகவே இருந்தது. அப்போது வாக்குத் திருட்டு நடைபெற்ா? அல்லது மக்களுக்கு உரிய சேவையை ஆற்றாத காரணத்தால் காங்கிரஸ் கரைந்துபோனதா? என்பதற்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும்.

வாக்காளா் பட்டியல்கள் தொடா்பாக புகாா் கூறும் காங்கிரஸ் ஒரு முறையான மேல்முறையீட்டு மனுவைக்கூட தாக்கல் செய்யவில்லை. குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அந்தக் கட்சியிடம் ஆதாரங்கள் இல்லை.

பாஜக ஒருபோதும் அரசியல் சட்ட அமைப்புகளையோ, நாட்டின் தோ்தல் முறையையோ கேள்விக்குள்ளாக்கியதில்லை. இந்த அமைப்புகளின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துவதன் மூலம் மக்களைத் தவறாக வழிநடத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.