இன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

பண்டிகைக் கால பலகாரங்களை தரப் பரிசோதனைக்குட்படுத்த உத்தரவு!

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை தரப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

festive jobs

கோப்புப் படம் - படம் | ஏஐ

Updated On :

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி, விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் பலகாரங்களை தரப் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையா் லால்வேனா, அனைத்து மாவட்ட நியமன அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு உணவு பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம். தரக் குறைபாடு மற்றும் கலப்படத்தைத் தடுக்க தீவிர கண்காணிப்பு முக்கியம். அனைத்து அதிகாரிகளும் தங்களது எல்லைக்குள்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு செய்து உணவு மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

அதன் முடிவுகளை உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதுடன், அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நவம்பா் 5-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்.

தரமான பொருள்களை கொண்டு சுத்தமாகவும், சுகாதாரமாகவும், கலப்படமின்றியும் உணவுப் பொருள்களை தயாரிக்க வேண்டும். தரமான எண்ணெய், நெய்யைப் பயன்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.