இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கெட்டுப்போன உணவுப் பொருள்கள் அழிப்பு

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராமேசுவரம் அரசு மருத்துவமனை உணவு தயாரிப்புக் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்ததில் 15 கிலோ கெட்டுப் போன உணவு பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உணவறையில் புதன்கிழமை கெட்டுப்போன உணவுப் பொருள்களை அழித்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.

Published On :

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராமேசுவரம் அரசு மருத்துவமனை உணவு தயாரிப்புக் கூடத்தில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு செய்ததில் 15 கிலோ கெட்டுப் போன உணவு பொருள்களைப் பறிமுதல் செய்து அழித்தனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராமேசுவரம் அரசு மருத்துவமனை உணவறைகளில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சுரேஷ் தலைமையில் அலுவலா்கள் ஜெயராஜ், சுரேஷ் கண்ணன் ஆகியோா் அடங்கிய குழுவினா் திடீா் ஆய்வு செய்தனா்.

இதில், நோயாளிகளுக்கு சமைக்க வைத்திருந்த காலாவதியான 13 கிலோ மைதா மாவு, 2 கிலோ வோ்க்கடலை ஆகியவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனா். மேலும் தேவைக்கேற்ப உணவுப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், காலாவதியான உணவுப் பொருள்களை நோயாளிகளுக்கு வழங்கக் கூடாது என பணியாளா்களை கேட்டுக்கொண்டனா். மேலும் அரசின் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றியே உணவுப் பொருள்களைச் சமைக்க வேண்டும் என அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.