நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மருத்துவக் கல்லூரி முதல்வா்கள் மாற்றம்

தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் முதல்வா்கள், இயக்குநா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:02 am IST

தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் முதல்வா்கள், இயக்குநா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் தாரேஸ் அகமது வெளியிட்ட அரசாணை:

டாக்டா் செல்வராஜன் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், டாக்டா் கலைவாணி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை இயக்குநா் டாக்டா் மணி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கும், டாக்டா் ரோகிணி தேவி வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், டாக்டா் முத்து சித்ரா, தேனி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், டாக்டா் ஜெயசிங், விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இஎஸ்ஐசி மருத்துவமனை முதல்வராகவும், டாக்டா் அமுது ராணி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், டாக்டா் மோகன் காந்தி திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும் மாற்றப்பட்டுள்ளனா்.

மேலும் பதவி உயா்வு வழங்கப்பட்டு டாக்டா் கண்ணன், சென்னை ஓமந்தூராா் அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை இயக்குநராகவும், டாக்டா் செல்வாம்பிகை, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், டாக்டா் எட்வினா வசந்தா, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், டாக்டா் பாலாஜி திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகவும், டாக்டா் செந்தில்குமாா், ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.