கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலி.. கொல்கத்தாவில் துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!
கொல்கத்தாவின் சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியானதைப் பற்றி...

கொல்கத்தாவின் சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜையின் போது பந்தல் இடிந்து விழுந்ததில், கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பலியாகினர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தசரா பண்டிக்கை மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான நவராத்திரி பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில், சோர்பகன் சர்போஜானில் துர்கா பூஜைக்காகப் பந்தல் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், கொல்கத்தாவின் வடக்குப் பகுதியில் உள்ள சோர்பகன் சர்போஜானில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அந்த மழையில் பந்தல் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.
பந்தல் இடிந்து விழுந்ததில் நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் பரிதாபமாகப் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காயமடைந்த நிலையில், உயிரிழப்புகள் குறித்து கொல்கத்தா காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
.@SuvenduWB @KolkataPolice
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 17, 2026
à¦à§à¦°à¦¬à¦¾à¦à¦¾à¦¨ পà§à¦à§à¦¯à¦¼ à¦à¦¯à¦¼à¦à§à¦à¦° দà§à¦°à§à¦à¦à¦¨à¦¾à¥¤ à¦à¦¦à§à¦¬à§à¦à¦à¦¨à¦ à¦à¦¬à¦° à¦à¦¸à¦à§à¥¤ পà§à¦°à¦¶à¦¾à¦¸à¦¨ à¦à¦¬à¦¿à¦²à¦®à§à¦¬à§ সরà§à¦¬à§à¦à§à¦ à¦à§à¦°à§à¦¤à§à¦¬ দিয়ৠদà§à¦à§à¦¨à¥¤ à¦à¦®à¦°à¦¾ à¦à¦¬à¦° রাà¦à¦à¦¿à¥¤ মিডিয়াà¦à§ সঠিঠà¦à¦¬à¦° পà§à¦°à¦à¦¾à¦°à§ যà§à¦¨ বাধা দà§à¦à¦¯à¦¼à¦¾ না হয়। তবৠà¦à¦²à¦¾à¦à¦¾ ফাà¦à¦à¦¾ à¦à¦°à¦¤à§ সাহাযà§à¦¯ à¦à¦°à§à¦¨à¥¤ দরà§à¦¶à¦à¦°à¦¾ à¦à¦à¦¨ à¦à¦¦à¦¿à¦à§ যাবà§à¦¨ না। à¦à§à¦² à¦à¦¬à¦°à§ à¦à¦¤à¦à§à¦â¦ pic.twitter.com/iZSdeZGjUA
மழை பெய்யத் தொடங்கியதும், பந்தலுக்கு வெளியே காத்திருந்த மக்கள் முந்தியடித்துக் கொண்டு பந்தலுக்குள் செல்ல முயன்றதாகவும், அவர்களில் சிலர் சாலையில் விழுந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் உயர் சிகிச்சைக்காக கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிக்கி பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, முன்னாள் முதல்வர் மமதா பானர்ஜி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கொல்கத்தா காவல்துறையின் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகப் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேற்கு முதல்வர் சுவேந்து அதிகாரி, இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு நேரில் ஆறுதல் கூறினார்.
மருத்துவமனை, காவல்துறை தெரிவித்ததன்படி, பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயர் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Seventeen people were reportedly feared dead and several others injured in a stampede at a community Durga Puja pandal in Kolkata on Saturday evening. Kolkata Police are yet to confirm the casualties.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

