பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதி!
எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.

எல்.கே. அத்வானி
பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக அவா் மருத்துவமனையில் இரவு 7.30 மணியளவில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் உறவினா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தில்லி அப்போலோ மருத்துவமனை தரப்பில் கூறுகையில், ‘அத்வானிக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவா்கள் அவரைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். அவரின் உடல்நிலை குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பாஜக தேசியத் தலைவராக பலமுறை இருந்துள்ள அத்வானி, கடந்த 2002 முதல் 2004-ஆம் ஆண்டு வரை நாட்டின் துணைப் பிரதமராகப் பதவி வகித்தாா். பாஜகவை மிகப் பெரிய தேசிய இயக்கமாக வலுப்படுத்தியதில் முக்கியப் பங்காற்றினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

