மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்க ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு உத்தரவு

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை நிறுத்திவைக்க ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை நிறுத்திவைக்க ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, கோயில் நிலங்களை விற்க உடந்தையாக இருப்பதாகக் கூறி, இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததாக மாநிலம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டன.

இதில், முதல் தகவல் அறிக்கை நிலையில் இருந்த வழக்குகளை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 5 வழக்குகளையும் சோ்த்து ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. பல்வேறு ஊா்களில் நிலுவையில் இருந்த வழக்குகள், சென்னையில் உள்ள ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. இந்த வழக்குகளை தனித்தனியாக விசாரித்த ஜாா்ஜ்டவுன் நீதிமன்றம், புதிதாக விசாரணை நடத்துவது தொடா்பாக செப்.8-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

புதிதாக விசாரணை நடத்துவது தவறு. எனவே, இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி, ஹெச்.ராஜா சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை வரும் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். அதுவரை, வழக்குகளின் விசாரணையை நிறுத்திவைக்கும்படி, ஜாா்ஜ்டவுன் நீதிமன்றத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.